“அடங்காத உடலுறவு வெறி..” தன்னை விட 10 வயது குறைவான கணவருக்கு 33 வயது பெண் செய்த கொடூரம்!

தென்காசி மாவட்டம், குத்துக்கல் வலசை அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான அபிராமி என்பவர், தனது 23 வயதான இரண்டாவது கணவரான காளிராஜை தனது மற்றொரு கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரத்தை செய்து இரண்டு ஆண்டுகளாக உண்மையை மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபிராமி சொந்தமாக ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அவருக்கு முதல் திருமணத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் கணவர் தங்கராஜ் உடனான தகராறுக்குப் பின் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் தனது பார்லர் வருமானத்தில் குழந்தைகளை வளர்த்து வந்த அபிராமிக்கு, அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான காளிராஜுடன் பழக்கம் ஏற்பட்டது.

கணவர் இல்லாமல் தனிமையில் தவித்து வந்த அபிராமி தன்னை விட பத்து வயது குறைந்தவர் என தெரிந்தும் கள்ள உறவை வளர்த்தார். அடிக்கடி வெளியே செல்வது, உல்லாசமாக இருப்பது என நாட்கள் நகர்ந்தது. ஒரு கட்டத்தில், காளிராஜின் பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு ஒரு வருட காலம் வரை காளிராஜ் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். பின்னர் அபிராமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு ரகசியமாக கண்காணித்தபோது, அவர் பலருடன் தகாத உறவு வைத்திருப்பதை கண்டறிந்தார்.

உடலுறவின் மீது அடங்காத வெறி கொண்டிருந்த அபிராமி தன்னுடன் நெருக்கமாக பழகும் ஆண்களுடன் பழகி வருவதும், வரம்பு மீறுவதும் வாடிக்கையாகி வந்திருகின்றது. குறிப்பாக அருகில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்யும் மாரிமுத்து என்பவருடன் நெருக்கமான தொடர்பு வைத்திருப்பதை ஆதரப்பூர்வமாக கண்டுபிடித்தான் காளிராஜ்.

இதைச் சுட்டிக்காட்டி அபிராமியை திருத்த முயன்ற காளிராஜ், அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில், காளிராஜை அகற்ற முடிவு செய்த அபிராமி, தனது கள்ளக்காதலன் மாரிமுத்துவிடம் திட்டம் தீட்டினார்.

ஒரு நாள் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பின்னர், காளிராஜுக்கு தோசை சுட்டு கொடுக்கும்போது அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார்.

மயக்கமடைந்த காளிராஜை இருவரும் கழுத்தை நெரித்து சேர்ந்து கொலை செய்து, வீட்டு வாசலில் குழி தோண்டி புதைத்தனர். பின்னர் அந்த இடத்தின் மீது துளசி மாடம் அமைத்து, சந்தேகம் வராதவாறு நடந்துகொண்டனர்.

காளிராஜ் திடீரென மறைந்ததால் அவரது தாயார் பலமுறை விசாரித்தபோது, அபிராமி “சண்டை போட்டு வெளியே போனார், வருவார்” என மழுப்பியதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அபிராமியும் மாரிமுத்துவும் ரகசிய உறவில் இருப்பது தெரியவந்ததால் சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரித்தபோது, இருவரின் செல்போன் உரையாடல்களிலிருந்து தகவல்கள் கிடைத்தன. இறுதியில் இருவரும் கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டனர்.

போலீசார் வீட்டு வாசலில் தோண்டியபோது காளிராஜின் எலும்புக்கூடு மீட்கப்பட்டது. மாரிமுத்துவின் நண்பர்கள் உள்பட சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary : In Tenkasi district, 33-year-old Abirami who runs a beauty parlor married 23-year-old Kaliraj despite family opposition. After a year of married life, differences emerged between them. Kaliraj suddenly went missing. Two years later, on his mother’s repeated complaints, police investigated and recovered his remains from the house front yard. Abirami and her associate Marimuthu were arrested in connection with the case.