300 தாத்தாக்களை வேட்டையாடிய பெண்! 250+ படுக்கையறை வீடியோக்கள்! இறுதியில் நடந்த சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!

மத்திய பிரதேச மாநிலத்தின் பரபரப்பான மாவட்டம் ஒன்றில், 28 வயது இளம் பெண் வினோதினி தன் வாழ்க்கையை மாற்றியமைக்க ஒரு வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்தார். இது நடிகர் துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொல்லையடித்தால்’ திரைப்படத்தின் கதையைப் போலவே தொடங்கியது. 

அந்தப் படத்தில் கதாநாயகி, தவறான நோக்கத்துடன் ஆண்களுடன் நெருக்கமாகப் பழகி அவர்களின் பணத்தை எடுத்துக்கொண்டு கம்பி நீட்டும் விதம் வரும். வினோதினியின் வாழ்க்கையிலும் இதே போன்ற ஒரு திருப்பம் நிகழ்ந்தது. ஆனால், அது சினிமாவை விஞ்சிய ஒரு உண்மைச் சம்பவமாக மாறியது.

வினோதினி தன் 28வது வயதில் கணவரைப் பிரிந்து, ஒரு சேவை மையத்தில் பணியாற்றி வந்தார். தன் வாழ்க்கைத் தேவைகளுக்காக வேலைக்குச் சென்ற அவரைப் பலர் தவறான கண்ணோட்டத்துடன் அணுகினர். 

இதில் 48 வயதான ஒரு நபர் அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். ஒரு கட்டத்தில் வினோதினிக்கு மாதவிடாய் சுழற்சி தாமதமானது. தான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்த அவர், இதை அந்த நபரிடம் தெரிவித்தார்.

பயந்துபோன அந்த 48 வயதான நபர், தன் குடும்ப மானம் காக்க 5 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்து, பிரச்சினையைத் தீர்க்கச் சொன்னார். ஆனால் சில நாட்களில் இயற்கையாகவே மாதவிடாய் வந்ததில், வினோதினி கர்ப்பமாக இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால் அந்த 5 லட்சம் ரூபாய் அவரிடம் இருந்தது. இந்தச் சம்பவம் அவருக்கு ஒரு புதிய வழியைத் திறந்துவிட்டது.

“தன்னுடன் நெருக்கமாகப் பழகும் ஆண்களிடம் கர்ப்பம் தொடர்பான புகாரை வைத்து மிரட்டி பணம் பெறலாம்” என்ற முடிவுக்கு வந்த வினோதினி, இதை ஒரு வழக்கமாக மாற்றினார். 

அவர் தேர்வு செய்த ஆண்கள் அனைவரும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். குடும்பம், குழந்தைகள், சமூக அந்தஸ்து உள்ளவர்கள். அவர்களுடன் நெருக்கமாகப் பழகிய பிறகு, தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, திருமணம் செய்துகொள்ளாவிட்டால் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாக அழுது மிரட்டினார்.

பயந்துபோன அந்த ஆண்கள் ஒவ்வொருவரும் 2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அவரிடம் கொடுத்தனர். இந்தப் பணத்தைக் கொண்டு வினோதினி நகரின் முக்கிய பகுதிகளில் பல குடியிருப்புகளையும் காலி மனைகளையும் வாங்கி சொத்துக்களை குவித்தார். இந்த வழியில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட நபர்களை அவர் ஏமாற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வகையில் கடைசியாக அவர் தொடர்பு கொண்டது 59 வயதான ஒரு நபருடன். அவருடன் நெருக்கமாகப் பழகிய வினோதினி, இந்த முறை உண்மையாகவே கர்ப்பமானார். 

தன் கர்ப்பத்திற்கு அந்த நபர்தான் காரணம் என்று கூறியபோது, அந்த 59 வயதான நபர் அதிர்ச்சியடைந்தாலும், “நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன். என் சொத்துக்கள் அனைத்தும் உனக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும்” என்று உறுதியளித்தார்.

ஆனால் வினோதினி, “எனக்கு பணம் கொடுத்தால் போதும். நான் இந்த கர்ப்பத்தைத் தொடர மாட்டேன்” என்று கூறினார். இதனால் கோபமும் வேதனையும் அடைந்த அந்த நபர், நேராக காவல் நிலையத்தின் படிகளில் ஏறி புகார் கொடுத்தார்.

உஷாரான காவல்துறையினர் உடனடியாக வினோதினியை கைது செய்தனர். விசாரணையின் போது அவரது கைபேசியில் 250க்கும் மேற்பட்ட தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் 300க்கும் மேற்பட்ட நபர்களை இதே முறையில் ஏமாற்றி லட்சக்கணக்கான பணம் – சில சமயங்களில் கோடிக்கணக்கில் – பெற்றது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டபோது அவரிடம் 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. மற்ற பணம் அவர் சொத்துக்களாக மாற்றியிருந்தார். பாதிக்கப்பட்ட பலர் தங்கள் குடும்ப மானம் காக்க லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வினோதினியிடமிருந்து ‘தப்பி’ இருந்தனர் என்பதும் விசாரணையில் வெளிப்பட்டது.

தற்போது வினோதினி காவல் விசாரணையில் உள்ளார். இந்த வழக்கில் மேலும் பல சொத்துக்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து ஆழமான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம், பணத்தாசை எப்படி ஒரு இளம் பெண்ணை இந்த அளவுக்கு மோசடி வலையில் இறங்க வைத்தது என்பதைப் பறைசாற்றுகிறது. சினிமா கதைகளை விஞ்சிய இந்த உண்மைத் திருப்பம், பலருக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

English Summary : In Madhya Pradesh, 28-year-old Vinodhini, separated from her husband, allegedly formed close relationships with over 300 older married men of high status. She claimed pregnancy and demanded money to handle the situation while threatening police complaints. 

She used the funds to buy prime properties. In one genuine case with a 59-year-old, he offered marriage but she demanded money instead. Police arrested her with evidence and are investigating.