பொட்டு துணி இல்ல, கல்லூரி மாணவியை இன்ஸ்டாவில் மயக்கி கயவர்கள் செய்த கொடூரம்! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வரும் இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இரு இளைஞர்களால் பண மிரட்டலுக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர், இன்ஜினியரிங் படிப்பை நிறுத்திவிட்டு, கல்லூரி மாணவியிடம் உதவி செய்யும் நபராக நடித்து நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

மாணவி தனது நகையை அடகு வைத்து பணம் தருமாறு கேட்டபோது, 60,000 ரூபாய்க்கு நகையை அடகு வைத்து, அதில் 30,000 ரூபாய் மட்டுமே கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மீதி பணத்தை பைக் வாங்கியதாகவும், ஜியூ தொகை கட்டாததால் பைனான்ஸ் மேனேஜர் எடுத்துக் கொண்டதாகவும் பொய்யான கதையைச் சொல்லி, சந்தேகம் இருந்தால் தனது நண்பர் சந்தோஷ் என்பவரைத் தொடர்பு கொள்ளுமாறு மொபைல் எண்ணை அனுப்பியுள்ளார்.

இதன்பின் சந்தோஷ் என்ற அந்த இளைஞரும் மாணவியுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். இருவரும் மாணவியிடம் இனிய வார்த்தைகளால் பேசி நம்பிக்கையை வளர்த்தனர்.

பின்னர் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசியபோது, தனிப்பட்ட முறையில் பார்க்க வேண்டும் எனக் கூறி வீடியோ அழைப்பைத் தொடங்கியுள்ளனர். அப்போது மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்து வைத்துக் கொண்டனர்.

பின்னர் அந்த தனிப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, பணம் கோரி மிரட்டல் விடுக்கத் தொடங்கினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, சோர்வுடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில், விடுதியில் பணியாற்றும் பெண் ஒருவர் மாணவியின் மனநிலையைக் கண்டு காரணம் கேட்டதற்கு, மாணவி முழு சம்பவத்தையும் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக கோவில்பாளையம் காவல் நிலையப் பொறுப்பு இன்ஸ்பெக்டர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தார்.

புகாரைப் பெற்ற இன்ஸ்பெக்டர் தியாகராஜன், உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டு தனிப்படையுடன் சேலம் மேச்சேரிக்கு சென்று, அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தார். விசாரணையில் இருவரும் தனிப்பட்ட வீடியோ எடுத்து மிரட்டியது உறுதியானது.

கோவில்பாளையம் போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

போலீசார் அறிவுறுத்தல்: சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்களுடன் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம். அப்பாவியாக பேசும் பெண்கள் இத்தகைய சிக்கல்களுக்கு ஆளாவது அடிக்கடி நடப்பதாகக் கூறும் போலீசார், இளம் பெண்கள் மிகுந்த ஜாக்கிரதையுடனும் கவனத்துடனும் பழகுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் இளம் தலைமுறையினரிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

English Summary : A final-year engineering student in a private college near Kovilpalayam, Coimbatore, faced financial cheating and blackmail after befriending two men from the Salem area via Instagram. The duo recorded private video calls and demanded money by threatening to circulate the recordings. Distressed, the student shared her ordeal with hostel staff, who alerted police. Officers arrested both suspects within 24 hours and remanded them to judicial custody.