உடலுறவின் போது வெடித்து சிதறிய காதலியின் உடல்! என்ன நடந்தது? மக்களே ஜாக்கிரதை! கொடூர காட்சி!
கர்நாடகாவின் மைசூரு மாவட்டம், ஹன்சூர் தாலுகாவில் உள்ள ஹிரசனஹள்ளி கிராமம். அங்கு வசித்து வந்த 25 வயது இளம்பெண் ரக்ஷிதா. திருமணமாகி ஒரு இரண்டு வயது குழந்தைக்கு தாயாக இருந்த அவர், வெளியில் இருந்து பார்க்க சாதாரண இல்லத்தரசியாகத் தெரிந்தாலும், அவரது வாழ்க்கையில் சில ரகசியங்கள் இருந்தன. சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு, திருமணத்துக்கு முன்னர் கல்குவாரியில் வேலை செய்யும் சித்தராஜு என்ற இளைஞருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. ரக்ஷிதாவின் கணவர் கேரளாவில் வேலை செய்து வரும் நிலையில், அந்த உறவு தொடர்ந்து வந்தது. இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசி வந்தனர். குடும்ப சூழல், திருமண வாழ்க்கை ஆகியவை அவர்களுக்கு இடையேயான தொடர்பை முழுமையாக தடுக்கவில்லை. ஒரு நாள் சனிக்கிழமை காலை, இருவரும் ஒன்றாக வெளியே செல்ல திட்டமிட்டனர். அருகிலுள்ள கோயிலுக்கு சென்ற பிறகு, மைசூரு அருகே உள்ள பேரியா (Bherya) பகுதியில் இருந்த ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அன்று மதியம் அல்லது மாலை நேரத்தில், அந்த அறைக்குள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நீ உன் கணவனை பிரிந்து என்னோடு வந்துவிடு. நான் உன்னையும், உன் குழந...