குஜராத் மாநிலம் சூரத் நகரில் பரபரப்பான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆன ஒரு பெண், தன் கணவர் தன்னை வேறொரு பெண்ணின் கணவருடன் உடலுறவில் ஈடுபட சொல்வதாகவும், அந்த நபரின் மனைவியுடன் என் கணவர் உடலுறவில் ஈடுபடுவார் எனவும் இந்த பரிமாற்றத்தை செய்ய வற்புறுத்தியதாக அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பான அவரது வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, திருமணத்துக்குப் பிறகு அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்தவும், புதிய நபர்களை அறிமுகம் செய்து வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியைப் பெறவும் என்று கூறி கணவர் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
ஆனால் அந்த பெண் இதற்கு உடன்பட மறுத்ததால், அவருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், தன்னுடைய உள்ளாடைகளை கிழித்து சித்ரவதை செய்ததாகவும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், பாதுகாப்பு கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ள அந்தப் பெண், தன்னிடம் சாட் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் போலி பெயர்களில் கணக்குகளைத் தொடங்கி, தம்பதியராக புகைப்படங்களைப் பகிர்ந்து உறுப்பினர்களை இணைக்கும் சில குழுக்கள் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதில் பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தம்பதியரும் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்கள் பலரும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பதையும் அவர்களது கணவர்களின் ரகசிய உறுப்பு வீங்கும் அளவுக்கு தாக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தன் வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த விவகாரத்தில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது இந்த புகார் தொடர்பான வழக்கு காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் கவனத்தில் உள்ளது. குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருமண உறவுகள், பாதுகாப்பு மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு ஆகியவை குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
English Summary : A woman in Surat, Gujarat, married for three months, has stated that her husband proposed partner exchange with another couple to enhance their financial status and bring more happiness. After she declined, she faced pressure and sought protection from authorities.
In a widely shared video, she appealed to Home Minister Harsh Sanghavi and shared supporting records. Police and court proceedings are ongoing.