சக தோழிகள் ஆடையின்றி இருக்க.. கள்ளக்காதலனுக்கு நூதன உதவி செய்த இரு குழந்தைகளின் தாய்.. காது கூசும் சம்பவம்..

திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் அந்தரங்கக் காட்சிகளை ரகசியமாக வீடியோ பதிவு செய்து, தனது கள்ளக் காதலனுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் திருமணமான பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் மகரஜோதி (39). இவர் திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர். இவரது கணவர் கண்ணன். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகரஜோதி குடும்பத்திலிருந்து பிரிந்து, திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்துள்ளார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் மகரஜோதிக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு பின்னர் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில், அந்த இளைஞர் விடுதியில் தங்கியுள்ள பெண்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து அனுப்புமாறு மகரஜோதியிடம் கேட்டுள்ளார்.

இதை ஏற்றுக்கொண்ட மகரஜோதி, விடுதியில் உள்ள குளியலறை, துணி மாற்றும் அறை உள்ளிட்ட இடங்களில் மற்ற பெண்கள் உடை மாற்றும் போது, ஆடையின்றி இருக்கும் போது போன்ற காட்சிகளை ரகசியமாக தனது செல்போனில் பதிவு செய்து, தனது கள்ளக் காதலனுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விடுதியில் தங்கியிருந்த சில பெண்கள், மகரஜோதியை மறைமுகமாகக் கண்காணித்துள்ளனர். அப்போது அவர் மறைந்திருந்து வீடியோ எடுப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், விடுதி காப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் விடுதி காப்பாளர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு, இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மகரஜோதியை கைது செய்தனர்.

அவரது செல்போன் மற்றும் பிற ஆதாரங்களைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கோயம்புத்தூர் இளைஞர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் மற்றும் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும், மறைமுக வீடியோ பதிவுகளைத் தடுக்க கடுமையான கண்காணிப்பு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Summary : A married woman aged 39 years from Tirunelveli was arrested in connection with secretly recording the activities of other women in a private hostel where she was staying. The recordings were sent to her acquaintance from Coimbatore. The police acted on a complaint filed by the hostel residents.