விருதுநகர் : தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மாதம் ரூ.2500 உயர்த்தி வழங்குவதாக த.வெ.க தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். இதுகுறித்து பல மகளிர் எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரி இன்று உறுதியளித்துள்ளார்.
விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, "நிறைய அம்மாக்கள் 2500 ரூபாய் பணத்தைப் பற்றி கேட்கிறார்கள். 2500 மகளீர் உரிமைத்தொகை பெறுவது எப்படி? என கேட்கிறார்கள்.
இப்போதைக்கு பழைய மாதிரி ரூ.1000 தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 2500 ரூபாய் வழங்குவதற்கான வழிமுறைகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

இது நீண்ட பிராசஸ் என்பதால் கொஞ்சம் நேரம் எடுக்கும். மாண்புமிகு முதலமைச்சர் உறுதியாக 2500 ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை" என்றார்.
மேலும், "பதிவு செய்தவர்களுக்கு பணம் வரவில்லை என்று புகார்கள் வருகின்றன. இது செயல்முறையில் உள்ளது. அலோ அல்லாதவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் வீட்டில் இரண்டு பேர் மனு கொடுத்திருந்தால், இப்போது பலர் கொடுத்துள்ளனர்.
சின்ன சின்ன விஷயங்களை சரிசெய்த பிறகு, அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவோம். எனவே கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முதலமைச்சர் கூறியபடி 2500 ரூபாய் கண்டிப்பாக வழங்கப்படும்" என்று அவர் விளக்கினார்.
திமுக ஆட்சியில் மாதம் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. கடந்த மாதம் பழைய ரூ.1000 தொகையே வழங்கப்பட்டதால், புதிய தொகை எப்போது அமலுக்கு வரும் என மகளிர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Summary in English : Tamil Nadu Minister Jagadeeswari assured that the women's rights amount will be hiked to Rs.2500 as promised. Speaking in Virudhunagar, she said the process is underway and urged patience, while Rs.1000 continues to be credited monthly. The scheme has been well-received for boosting cash flow in rural areas.
இதையும் படிங்க :
இதையும் படிங்க :