“மனைவி ஆபாச படம் பார்த்து சுய இ**ம் செய்கிறாள்” கணவன் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றம் கொடுத்த நெத்தியடி பதில்!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கணவர், தனது மனைவி ஆபாசப் படங்களைப் பார்த்து சுய இ**பத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி விவாகரத்து கோரினார்.

ஆனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அந்தக் கோரிக்கையை முழுமையாக நிராகரித்து, தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று தெளிவாகக் கூறியுள்ளது.

இந்தத் தம்பதியருக்கு 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் இரண்டாவது திருமணம் செய்தவர்கள். முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற பிறகுதான் இவர்கள் மணம் முடித்தனர். குழந்தைகள் இல்லை. 2020 டிசம்பர் முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மனைவி தனது திருமண உரிமையை மீட்டுத் தருமாறு கரூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் கணவர் கோவை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

இரு வழக்குகளும் கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. கணவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்து அந்த நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து கணவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். அப்போது அவர் தனது மனைவி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மனைவி அதிகச் செலவு செய்பவர், ஆபாசப் படங்களைப் பார்ப்பதில் அடிமையானவர், சுய இ**பத்தில் அடிக்கடி ஈடுபடுபவர், நீண்ட நேரம் மொபைலில் பேசுபவர், வீட்டு வேலைகளைச் செய்வதில்லை, மாமியார்-மாமனாரை மதிப்பதில்லை என்று கூறினார். மேலும் மனைவிக்கு பால்வினை நோய் இருப்பதாகவும், அதனால் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆர். பூர்ணிமா அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்:

“தடை செய்யப்பட்ட வகையைத் தவிர, தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதை குற்றமாகக் கருத இயலாது. மனைவி தனியாக ஆபாசப் படம் பார்ப்பதும், சுய இ**பத்தில் ஈடுபடுவதும் கணவரைக் கொடுமைப்படுத்துவதாக எடுத்துக்கொள்ள முடியாது.”

மேலும் நீதிபதிகள் கூறியதாவது: “ஆண்கள் சுய இ**பத்தில் ஈடுபடுவதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில், பெண்கள் அதையே செய்வதை களங்கமாகப் பார்க்க முடியாது. பெண்களின் சுய இ**பத்தை களங்கப்படுத்த முடியாது. இது விவாகரத்து கோருவதற்கான சட்டப்பூர்வ காரணமாக அமையாது.”

மனைவி மீது சுமத்தப்பட்ட பால்வினை நோய் குற்றச்சாட்டுக்கு எந்த மருத்துவ ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், மற்ற குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்திருந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்திருந்தால் அவ்வாறு வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

“தனி உரிமை அடிப்படை உரிமை. திருமண உறவில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும். திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் மனைவியாக மாறுகிறார். ஆனால் அவரது பாலியல் சுதந்திரத்தின் பல்வேறு அம்சங்களும் அதில் அடங்கியுள்ளன” என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆபாசப் படங்களைப் பார்ப்பது உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், அது மற்றவரைக் கட்டாயப்படுத்தினால் அதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். ஆனால் தனிப்பட்ட முறையில் பார்ப்பது விவாகரத்துக்குக் காரணமாகாது என்பதை உறுதி செய்தனர்.

இறுதியில் கணவரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், கரூர் குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தனர். மனைவி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும் கூட அவை சட்டப்படி விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக இல்லை என்று தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு திருமண உறவில் பெண்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் சமத்துவம் குறித்து முக்கியமான செய்தியை வழங்கியுள்ளது என சட்ட வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

Summary in English : A Karur man sought divorce claiming his wife watched adult content and engaged in private self-gratification. The Madras High Court Madurai Bench rejected the plea, holding that such personal conduct does not amount to cruelty or form grounds for divorce. The judges underlined gender equality and individual liberty within marriage.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!