Posts

Showing posts with the label personal liberty

“மனைவி ஆபாச படம் பார்த்து சுய இ**ம் செய்கிறாள்” கணவன் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றம் கொடுத்த நெத்தியடி பதில்!

Image
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கணவர், தனது மனைவி ஆபாசப் படங்களைப் பார்த்து சுய இ**பத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி விவாகரத்து கோரினார். ஆனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அந்தக் கோரிக்கையை முழுமையாக நிராகரித்து, தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று தெளிவாகக் கூறியுள்ளது. இந்தத் தம்பதியருக்கு 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் இரண்டாவது திருமணம் செய்தவர்கள். முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற பிறகுதான் இவர்கள் மணம் முடித்தனர். குழந்தைகள் இல்லை. 2020 டிசம்பர் முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவி தனது திருமண உரிமையை மீட்டுத் தருமாறு கரூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் கணவர் கோவை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இரு வழக்குகளும் கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. கணவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்து அந்த நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கணவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். அப்போது அவர் தனது மனைவி மீது பல கு...