பிரபல நடிகை வாணி போஜன் ஒரு பேட்டியில் தனது இளமைப் பருவ அனுபவங்களை தைரியமாகப் பகிர்ந்துகொண்டார்.
முதன்முறையாக எப்போது முத்தம் கொடுத்தார் என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், “என் அம்மா வேறு இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள், பரவாயில்லை இருந்தாலும் சொல்கிறேன். 16 வயதில் முதல் முத்தம் கொடுத்தேன்” என்று கூறினார்.

அதே பேட்டியில், எந்த வயதில் முதல் பிரேக் அப் ஏற்பட்டது என்கிற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார். “பதினாறு வயதில் தான் எனக்கு முதலில் பிரேக் அப் ஆனது. அப்போதெல்லாம் பிரேக் அப் என்ற விஷயம் எல்லாம் பெரிதாக பேசப்படாத காலம்.
பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று புரிந்து சென்று விடுவார்கள். ஆனால் இப்போதுதான் பிரேக் அப் அது இது என்று பெரிய சோகமான விஷயமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று விளக்கினார்.

வாணி போஜனின் இந்த திறந்த மனதுடன் பேசிய பதில்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்றைய இளைஞர்கள் உறவுகளை கையாளும் விதம் குறித்து அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருப்பது கவனத்தை ஈர்க்கிறது.
16 வயதில் ஏற்பட்ட முதல் காதல் அனுபவங்கள் மற்றும் பிரிவு குறித்து அவர் நினைவுகூர்ந்த விதம் பலருக்கும் பழைய காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது.

தமிழ் திரையுலகில் இயற்கையான நடிப்பு மற்றும் அழகுக்கு பெயர் பெற்ற வாணி போஜன், தனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வது இது முதல் முறையல்ல. இந்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

English Summary : In a recent interview, actress Vani Bhojan openly shared that she had her first kiss at the age of 16. She also revealed that her first breakup happened at the same age.
The actress noted that during her younger days, if a relationship did not work out, people simply moved on without much drama. However, she observed that today breakups are often treated as major emotional events. She humorously mentioned that her mother might watch the show.