தமிழ் சினிமா நடிகை சுவாசிகா சமீபத்தில் ஒரு ஹோட்டலுக்கு சென்ற தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் தனது அம்மாவுடன் ஒரு லட்சம் ரூபாய் எடுத்துச் சென்று இயக்குநர் முருகதாஸை சந்திக்க சென்றதாகவும், ஆனால் அவர் அங்கு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
சேகுவேரா, சுவாசிகாவின் அறிக்கையை வரவேற்று, பெண்கள் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை பாராட்டினார். இருப்பினும், அவர் தனது அறிக்கையில் முருகதாஸ் பெயரை குறிப்பிட்டு பேசிய விதத்தை கேள்விக்கு உள்ளாக்கினார்.
“நீங்கள் தைரியமாக பேசுகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் யார் உங்களை அழைத்துச் சென்றாரோ அவரது பெயரை ஏன் சொல்லவில்லை?” கண்டிப்பாக உங்களுக்கு பரிட்சயமான நபர் அழைத்து தானே சென்றிருப்பீர்கள்? அல்லது யார் கூப்பிட்டாலும் போயிடுவியா? என்று காட்டமான கேள்வி எழுப்பினார்.
முக்கிய கேள்விகள்:
சேகுவேரா மேலும் கூறியதாவது: “முருகதாஸ் பெயரை சொல்வதில் தயக்கம் இல்லை. ஆனால் அவரை அழைத்துச் சென்ற நபரின் பெயர், டிசைனேஷன் எதையும் சொல்லாமல் இருப்பது ஏன்? ஒரு பிரபல இயக்குநரிடம் அழைத்துச் செல்வதாக சொல்லி பணம் வாங்கி ஏமாற்றியிருந்தால், அந்த நபரைப் பற்றி முழுமையாக தெரிவிக்க வேண்டும். பெயர் சொல்லாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
அவர், “நீங்கள் நான்கு படங்களில் நடித்துள்ளீர்கள். அதில் முழு கதாநாயகியாக கூட இல்லை. ஆனால் நல்ல வேலையை செய்துள்ளீர்கள். அதை நான் குறை சொல்லவில்லை. ஆனால் இந்த குற்றச்சாட்டில் முழு தைரியத்துடன் இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
சினிமா துறையின் யதார்த்தம்:
சேகுவேரா, சினிமா துறையில் உள்ள சவால்களை பேசினார். “இங்கு ஆண், பெண் என்று இரு தரப்பிலும் பொறுக்கிகள் இருக்கிறார்கள். சூழ்நிலை காரணமாக சிலர் சமரசம் செய்துகொள்கிறார்கள்.
ஆனால் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பூ விற்று அல்லது மீன் விற்று நிம்மதியாக வாழலாம். உடல் நலத்துடன் இருக்கலாம். ஏன் இப்படி?” என்று கேள்வி எழுப்பினார்.
மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு வரும் போது பாதுகாப்பு குறித்தும் அவர் பேசினார். சுவாசிகா தனது அம்மாவின் எச்சரிக்கையை மீறி சென்றதாக கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
துணிச்சல் vs பொறுப்பு:
“தைரியமாக பேசுவதாக சொல்கிறீர்கள். ஆனால் பெயர் சொல்ல தயக்கம் ஏன்? இது மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால், முழு உண்மையை சொல்லுங்கள். ஒரு லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டதாக சொல்கிறீர்கள். ஆனால் உண்மையான நபரை மறைப்பது எதற்கு?” என்று சேகுவேரா கேட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சினிமா துறையில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. சிலர் சுவாசிகாவின் துணிச்சலை பாராட்டினாலும், சிலர் முழு விவரங்களை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்கின்றனர்.
இந்த விவகாரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவரங்கள் வெளியானால் தொடர்ந்து உங்களுக்கு பகிர்வோம்.
English Summary : Actress Swasika claimed she went to a hotel with Rs.1 lakh along with her mother expecting to meet director Murugadoss but returned disappointed. Journalist Cheguera appreciated her courage in speaking out but questioned why she named only Murugadoss and not the person who took her there. He discussed adjustments in cinema and urged full transparency.