இரண்டாம் திருமணம்! மாப்பிள்ளை குறித்து சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக ப்ரியா ஓப்பன் டாக்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் 15 ஆண்டுகளுக்கு முன் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொடரில் திருமுருகனின் தங்கைகளில் ஒருவராக ராகிணி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதி சண்முகப்பிரியா, அந்தப் பாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் ‘கல்யாண பரிசு’, ‘வாணி ராணி’, ‘பாரதி கண்ணம்மா’ உள்ளிட்ட பல பிரபலமான சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேகரை 2022 மே மாதம் திருமணம் செய்துகொண்டார். உடற்பயிற்சி பயிற்சியாளராகவும், மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவராகவும் அறியப்பட்ட அரவிந்த், திருமணம் ஆன சில மாதங்களிலேயே 2023 ஆகஸ்ட் மாதம் திடீரென உயிரிழந்தார். இந்த நிகழ்வு அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

கணவர் இல்லாத போதும், ஸ்ருதி இப்போதும் அவரைப் பற்றி அன்போடு பேசிக்கொண்டே இருக்கிறார். “அவர் என்னுடன் தான் இருக்கிறார். நான் அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவது ரசிகர்களை நெகிழ வைக்கிறது.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மறுமணம் குறித்து தனது மனநிலையை தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். “என்னை இரண்டாவது திருமணம் செய்யச் சொல்லி பெற்றோர்களும், மாமியாரும், நலன் விரும்பிகளும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். 

ஆனால் இந்த சமூக அமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. தனியாக வாழ்வதும், மறுமணம் செய்துகொண்டு வாழ்வதும் அவரவர் திறமையைப் பொறுத்தது” என்று கூறியுள்ளார்.

மேலும், “வரும் காலங்களில் எனக்கு வேறு ஒருவரைப் பிடித்தால் கூட, அவரை எனக்கு அனுப்பி வைத்தவர் என் பாதுகாவலர் தேவதை. என் கணவர் அருணாகத் தான் இருப்பார்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கணவரின் நினைவுகளுடன் தொடர்ந்து வாழும் ஸ்ருதி, தனது வாழ்க்கைப் பாதையை தானே தீர்மானிக்க விரும்புவதாகத் தெரிகிறது. ரசிகர்களும் அவரது இந்த உறுதியான நிலைப்பாட்டைப் பாராட்டி வருகின்றனர்.

English Summary : Serial actress Shruthi Shanmugapriya, known for her role as Ragini in Sun TV’s hit show Nadhaswaram, lost her husband Aravind Sekar (whom she calls Arun) months after their 2022 marriage. In a recent interview, she said her family urges remarriage, but she trusts her late husband as her guardian angel if she ever chooses a new partner.

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!