இரண்டாம் திருமணம்! மாப்பிள்ளை குறித்து சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக ப்ரியா ஓப்பன் டாக்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் 15 ஆண்டுகளுக்கு முன் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொடரில் திருமுருகனின் தங்கைகளில் ஒருவராக ராகிணி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதி சண்முகப்பிரியா, அந்தப் பாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் ‘கல்யாண பரிசு’, ‘வாணி ராணி’, ‘பாரதி கண்ணம்மா’ உள்ளிட்ட பல பிரபலமான சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேகரை 2022 மே மாதம் திருமணம் செய்துகொண்டார். உடற்பயிற்சி பயிற்சியாளராகவும், மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவராகவும் அறியப்பட்ட அரவிந்த், திருமணம் ஆன சில மாதங்களிலேயே 2023 ஆகஸ்ட் மாதம் திடீரென உயிரிழந்தார். இந்த நிகழ்வு அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. கணவர் இல்லாத போதும், ஸ்ருதி இப்போதும் அவரைப் பற்றி அன்போடு பேசிக்கொண்டே இருக்கிறார். “அவர் என்னுடன் தான் இருக்கிறார். நான் அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவது ரசிகர்களை நெகிழ வைக்கிறது. சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மறுமணம் குறித்து தனது மனநிலையை தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். “என்னை இரண்டாவது ...