சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் நடிகை கயாடு லோகரிடம் ‘Situation-ship’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேள்விக்கு பதிலளித்த கயாடு லோகர், “Situation-ship என்றால் ஒருவர் மற்றொருவரை காதலிக்கவில்லை. எதிர்காலத்தில் காதலிக்கவும் விரும்பவில்லை. ஆனால் உடலுறவுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் அவருடன் அன்பாக இருப்பதற்கு பெயர் Situation-ship” என்றும் அதற்கு இந்த உறவு பயன்படுகிறது என்று தெளிவாக விளக்கினார்.

இந்த விளக்கத்தை அடுத்து, நேர்காணலாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். “Situation-ship குறித்து உங்களுடைய பதில் என்ன? இந்த தேசம் அதற்கான பதிலைத் தெரிந்து கொள்ள விரும்புகிறது மேடம்…” என்றார்.
இதற்கு கயாடு லோகர் எந்தவித தயக்கமும் இல்லாமல், “நான் சர்ச்சைகளைத் தவிர்க்க விரும்புகிறேன்” என்று வெளிப்படையாக பதிலளித்தார். அவரது இந்த நேரடியான பதில் பலரையும் அதிர வைத்துள்ளது.
டிராகன் திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட கயாடு லோகர், தனது நேர்காணல்களில் பெரும்பாலும் தனிப்பட்ட கருத்துக்களைத் தவிர்த்து, திரைப்படம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த முறையும் அதே அணுகுமுறையைப் பின்பற்றி, சர்ச்சைக்குரிய தலைப்பில் தனது தனிப்பட்ட கருத்தைக் கூற மறுத்துவிட்டார்.
அவரது இந்த பதில், இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சிலர் அவரது நேர்மையான அணுகுமுறையைப் பாராட்டும் அதே வேளையில், சிலர் அதிக விவரங்களை எதிர்பார்த்திருந்ததாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கயாடு லோகர் தற்போது பல புதிய திட்டங்களில் பணிபுரிந்து வருகிறார். அவரது இந்த நேர்காணல் பகுதி சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.
English Summary : In a recent interview, actress Kayadu Lohar explained situation ship as a connection without love or future commitment, involving only temporary affection. When asked for her personal view, she clearly stated her preference to avoid controversies, surprising many followers.