ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு - ஹேமா தம்பதியினருக்கு 17 ஆண்டுகால திருமண வாழ்க்கை. இவர்களுக்கு 8 வயது மற்றும் 5 வயது ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலி வேலையாளாகப் பணியாற்றி வந்தார்.
வேலை காரணமாக பெரும்பாலும் விசாகப்பட்டினத்திலேயே தங்கியிருந்த அவர், அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பண்டாரு கங்காதர் என்பவருடன் ஹேமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நெருக்கமான உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஊர்மக்களின் கவனத்திற்கு வந்ததையடுத்து, அப்பலநாயுடு வீட்டிற்கு வந்து மனைவியை எச்சரித்து, அந்த உறவை முறித்துக் கொள்ளுமாறு கூறியதாகத் தெரிகிறது.
ஆனால், அப்பலநாயுடு மீண்டும் வேலைக்காக விசாகப்பட்டினம் சென்ற பிறகும் இருவரும் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேகம் அதிகரித்ததால் அப்பலநாயுடு தனது வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பி, வீட்டிலிருந்தபடியே உள்ளூர் கூலி வேலைகளுக்குச் சென்று வந்தார்.
இதனால் ஹேமா தனது நெருங்கிய தோழரை சந்திக்க முடியாத சூழல் உருவானதாகவும், அதன் காரணமாக ஆத்திரமடைந்த ஹேமா கணவரை இழக்கச் செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சீக்கிரமா வாடா.. நல்லா அமுக்கு..
போலீசார் தெரிவித்தபடி, சம்பவத்தன்று இரவு ஹேமா தனது கணவரின் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்த பின்னர், ஹேமா தனது கள்ளக்காதலன் கங்காதருக்கு தொடர்பு கொண்டு சீக்கிரமா வாடா என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து கங்காதர் ஏற்பாடு செய்த மூன்று பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து அப்பலநாயுடு கழுத்தை நெரித்து உயிரிழக்கச் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது, நல்லா அமுக்கு என்று அருகில் இருந்து ஆர்டர் போட்டுள்ளார் பத்தினி ஹேமா.
கள்ளக்காதலன் முன்பு ஆடைகளை கழட்டி..
சம்பவத்தை மறைக்கும் வகையில் ஹேமா வீட்டிலிருந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்து, கள்ளக்காதலன் கண் முன்னே கணவரின் ஆடைகளை மாற்றியதாகவும் தெரிகிறது. மறுநாள் காலை எதுவும் நடக்காதது போல் வெளியே வந்து அக்கம்பக்கத்தினருடன் இயல்பாகப் பேசியும், காபி அருந்தியும் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அப்பலநாயுடுவின் அண்ணன் மகன் வீட்டிற்கு வந்து "சித்தப்பா எங்கே?" எனக் கேட்டபோது, "இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்" என்று ஹேமா பதிலளித்தார். சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அப்பலநாயுடு உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் ஹேமாவிடம் தீவிர விசாரணை நடத்தியதில், தனது தோழர் கங்காதருடன் சேர்ந்து இந்தச் சம்பவத்தைத் திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஹேமா மற்றும் கங்காதர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலையில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேரைத் தேடி தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணையில் மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அப்பலநாயுடுவிடமிருந்த பணத்திலிருந்தே ஒரு லட்சம் ரூபாய் எடுத்து அந்தக் கும்பலுக்கு கொடுத்ததாக ஹேமா ஒப்புக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் அனகாபள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு பெண் குழந்தைகளுடன் துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கு உள்ளூர் மக்களும் உறவினர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary : In Anakapalle, Andhra Pradesh, a couple married for 17 years with two young daughters faced family strain. The husband, a daily wage worker, returned home permanently due to growing suspicions. Police say the wife and her close friend planned an incident resulting in the husband’s death during sleep. Both were arrested after investigation.இதையும் படிங்க :
இதையும் படிங்க :