சன்னி லியோன்: சுய இ*பம் அன்றாட வாழ்க்கையின் இயல்பான பகுதி – தீய பார்வை மட்டும் பேசப்படுவது தவறு என்கிறார்.
நடிகை சன்னி லியோன் சுய இ*பம் குறித்து தனது கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். சமூகத்தில் இன்னும் தடை மற்றும் அவமானப் பார்வையுடன் பார்க்கப்படும் இந்த விஷயத்தை அவர் அன்றாட வாழ்க்கையின் இயல்பான அம்சமாகவே பார்க்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “சுய இ*பம் என்பதை நான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன். நாம் எப்படி தினமும் உணவு உண்கிறோம், நம் உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், மகிழ்ச்சியாக இருக்கிறோம், சோகமாக இருக்கிறோம் எனப் பல உணர்வுகள் இருக்கின்றன.
அந்த ஒவ்வொரு உணர்வையும் நாம் பல வழிகளில் கட்டுப்படுத்துகிறோம். பசியாக இருக்கும்போது சாப்பிடுகிறோம். கோபமாக இருக்கும்போது அந்தக் கோபத்தைத் தணிக்க முயற்சி எடுக்கிறோம். இப்படி நம்முடைய உடலின் அனைத்து உணர்ச்சிகளுக்கும் நாம் மதிப்பு கொடுக்கிறோம்.
அதேபோலத்தான் சுய இ*பமும். தேவையான நேரத்தில், தேவையான தருணத்தில், யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நம்முடைய தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்ளும்போது அது எப்படித் தவறு என்று ஆகும்? ஒவ்வொருவருடைய தேவை, எதிர்பார்ப்பு, அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை – இவைதான் இது சரியா தவறா என்று தீர்மானிக்கின்றன.
பொதுவாகப் பார்க்கும்போது இது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி என்றுதான் நான் கருதுவேன்.”
மேலும் அவர் சுய இ*பத்தின் நன்மைகளைப் பட்டியலிட்டார். “சுய இ*பம் என்பது நம்முடைய உடலுக்கு நாம் கொடுக்கக்கூடிய மகிழ்ச்சி. இது மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும். இதனால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.
ஆனால் இது பற்றிய தீமையான விஷயங்கள் மட்டுமே பொது வெளியில் பெரிய அளவில் பேசப்படுகிறது. எல்லா விஷயத்துக்குமே நல்லது என்று ஒன்று இருந்தால் கெட்டது என்று ஒன்று இருக்கும். ஆனால் இந்த விஷயங்களில் கெட்ட விஷயங்கள் மட்டுமே பேசப்படுகிறது என்பது தவறான போக்கு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சன்னி லியோன் தனது இந்தக் கருத்தின் மூலம் உடல் உணர்வுகளையும் தேவைகளையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நடக்கும் விஷயங்களை அவமானப்படுத்தத் தேவையில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார். யாருக்கு தொந்தரவு செய்யாமல் சுய இ*பம் செய்வது தான் சரியான முறை.
சமூகத்தில் இன்னும் பலர் இந்தத் தலைப்பை வெளிப்படையாகப் பேசத் தயங்கும் நிலையில், அவரது இந்த வெளிப்படையான கருத்து விவாதங்களைத் தூண்டியுள்ளது.
Summary in English : Sunny Leone described self-happiness as a natural part of daily life, much like eating or handling emotions. She believes meeting one's own needs privately without affecting others is acceptable. It helps ease stress and supports better rest. She criticized the tendency to focus only on downsides in public talks.