பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா தனது வாழ்க்கையின் மிகவும் தனிப்பட்ட மற்றும் கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
இளம் வயதில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலத்தில், ஹீரோவுடன் நடிக்க வேண்டிய படுக்கையறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை சமாளிக்க முடியாமல், அந்தக் காட்சிகளுக்கு முன் உள்ளே இரண்டு பேர் மது அருந்திவிட்டுத்தான் நடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.

“அப்பொழுதுதான் எந்த கூச்சமும் இல்லாமல், வெட்கமும் இல்லாமல் அந்தக் காட்சிகளை நடித்து முடிக்க முடியும்” என அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் காட்சிகளைச் சமாளிப்பதற்காகத் தொடங்கிய இந்தப் பழக்கம், நாளடைவில் அவரை முழுமையாக அடிமையாக்கிவிட்டது.
“என்னை மீறி நான் மது அருந்த ஆரம்பித்தேன். அந்தப் பழக்கம் என்னை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியது” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மதுப்பழக்கமே தனது புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக அமைந்ததாக மனிஷா தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 2012-ஆம் ஆண்டு அவருக்கு ஓவேரியன் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அந்தக் கட்டத்தில் அவர் மிகவும் கடுமையான போராட்டத்தை சந்தித்தார்.
அறுவை சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட கடுமையான சிகிச்சைகளை நியூயார்க்கில் மேற்கொண்டார். மருத்துவர்களின் தொடர்ச்சியான உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த நோயிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன் என அவர் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
மனிஷா தனது வாழ்க்கை அனுபவங்களை ‘Healed: How Cancer Gave Me a New Life’ என்ற புத்தகத்தில் ஏற்கனவே விரிவாக எழுதியிருந்தார். அதில் மதுப்பழக்கத்தின் ஆபத்துகள், அது எவ்வாறு வாழ்க்கையை சீரழித்தது, புற்றுநோய் அவருக்கு வாழ்க்கையின் மதிப்பை உணர்த்தியது போன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பதிவு செய்திருந்தார். இந்த சமீபத்திய பேச்சிலும் அவர் அதே வெளிப்படைத்தன்மையைத் தொடர்ந்திருக்கிறார்.
இன்று மனிஷா கொய்ராலா புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு, நடிப்பையும் தொடர்ந்து வருகிறார். ஹீராமண்டி போன்ற சமீபத்திய படைப்புகளில் அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில், தனது கடந்தகால தவறுகளையும் போராட்டங்களையும் இளம் தலைமுறைக்குப் பாடமாகச் சொல்லி, மதுப்பழக்கத்தின் ஆபத்துகளை உணர்த்தும் விதமாகவும் அவர் பேசி வருகிறார்.
“நாம் எதையாவது சமாளிக்க ஆரம்பிக்கும் பழக்கம், ஒரு கட்டத்தில் நம்மை முழுமையாக ஆட்டிப்படைத்துவிடும். அதிலிருந்து மீள்வதற்கு மிகுந்த உறுதியும், மருத்துவ உதவியும் தேவை” என்ற செய்தியை அவரது பேச்சு தெளிவாக வலியுறுத்துகிறது.
Summary in English : Manisha Koirala shared that early in her film career she consumed alcohol before performing certain scenes with co-stars to overcome hesitation and complete them comfortably. The habit gradually became an addiction that she later connected to her serious illness. With doctors’ support she recovered and continues working while openly discussing her past experiences.
