கட்சி வேலை.. கட்சி வேலை.. என சொல்லி மனைவியை வேட்டையாடிய தவெக நிர்வாகி! கணவர் வெளியிட்ட பகீர் வீடியோ!
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் களத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது. இவரது கணவர் ராஜலிங்கம், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வரும் ராஜலிங்கம், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் தனது நெருங்கிய உறவினரின் மகளான தனலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடைபெற்றபோது தனலட்சுமிக்கு 16 வயதுதான். அதனால் 18 வயது வரை அவரைக் காப்பகத்தில் வைத்திருந்தனர். 18 வயது ஆனபிறகு இருவரும் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கினர். ஒன்றாக வாழத் தொடங்கியதும் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் தனலட்சுமி கணவரைப் பிரிந்து தாய்வீட்டில் வசிக்கத் தொடங்கினார். பின்னர் தவெக கட்சியில் இணைந்து, கடவூர் தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார். கணவனைப் பிரிந்து வாழ்ந்த தனலட்சுமிக்கு, அதே ஒன்றிய செயலாளரான முத்துசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நெருக்கமாக மாறியதாகக் கூறப்படுகிறது. வசதியான பின்னணியைச் சேர்ந்த முத்துசாமி, தனலட்சுமிக்குத் தேவையான பொருட்களை ...