அருண் மாதேஸ்வரனும் லோகேஷ் கனகராஜும் சேர்ந்து படம் எடுக்கறதுக்கு கதை வேணாம், வசனம் வேணாம். தேவையானது ஒரே ஒரு லிஸ்ட் தான்.

டாட்டா சால்ட் 10 மூட்டை (இதுதான் ஹெராயின்/கொக்கைன்), துருப்புடிச்ச கத்தி, கோடாரி, ஸ்க்ரூ டிரைவர், ஸ்பேனர், மிலிட்டரிலயும் போலீஸ்லயும் இல்லாத அட்வான்ஸ்டு துப்பாக்கிகள், அழுக்கு பிடிச்ச பழைய கட்டடங்கள், பழைய அம்பாசடர் கார், மெட்ரோ டோர் வேன், புழுதி பறக்கிற ரோடு, 10 நாளா பல் விளக்காம குளிக்காம இருக்கிற ஆட்கள். இவங்களை தட்டினாலே தூசி பறக்கணும். இவ்ளோதான்.
இந்த லிஸ்ட்டை வச்சுதான் ‘DC’ பிறந்திருக்கு.
இயக்குநர்: அருண் மாதேஸ்வரன்
நட்சத்திரம்: லோகேஷ் கனகராஜ்
கதை என்ன?
ஒரு சின்ன போராளி குழு. அதில் லோகேஷ் முக்கிய ஆள். போலீசுக்கு ஆயுதம் சப்ளை ஆகிற வேனை பாலத்துல மடக்குறாங்க. ஆயுதங்களை எல்லாம் எடுத்துக்கிட்டு போயிடுறாங்க.
அந்த பாலத்துலயே போலீஸ் செக் போஸ்ட் போட்டு நிக்குறாங்க. அங்க ஒரு அப்பா, அம்மா, ஸ்கூல் பையன் நடந்து வராங்க. பையனை இங்கிலீஷ் மீடியத்துல சேர்க்க 7 லட்சம் ரூபாய் எடுத்துக்கிட்டு வராங்க. செக் போஸ்ட்ல இருக்கிற போலீஸ் அதிகாரி அந்த 7 லட்சத்துக்காக அப்பாவை கொலை பண்ணிடுறான்.
இந்த தகவல் போராளி குழுவுக்கு தெரிய வருது. “நாமளும் இதுக்கு சம்பந்தப்பட்டவங்கள்தான். இந்த பையனை படிக்க வைக்கணும்”னு ஹீரோ போலீஸை அட்டாக் பண்ண ஆரம்பிக்குறாரு.
இதுவரைக்கும் ஓகே. ஆனா அடுத்ததுதான் மஜா.
அப்புறம் என்ன நடக்குது?
மணி சார் படத்துல மாதிரி ஹீரோ லவ்ல போயிடுறாரு. பார்ல ஒரு பொண்ணை பார்க்கிறாரு. அவளும் பாக்குறா. பார்த்த உடனே ஹீரோ அழகுல மயங்கி விழுந்துருறா.
அடுத்தது ரெட் லைட் ஏரியா. அங்கயும் ஒரு பொண்ணை பார்க்கிறாரு. அவளும் விழுந்துருறா.
இடையில யார் வந்தாலும் வெட்டி குத்துறாரு. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வந்தாலும் வெட்டு, லைட்மேன் வந்தாலும் வெட்டு, கிரேன் ஆபரேட்டர் உள்ள நுழைஞ்சாலும் வெட்டு. பூட்டிங் ஸ்பாட்ல யாராவது தவறுதலா நுழைஞ்சாலும் போச்சு.
7 லட்சம் ரூபாய் சிக்கினா அந்த பையனை படிக்க வைப்பாங்களா? இல்ல. ஏரியா ஏரியா தாவிக்கிட்டே இருப்பாங்க. போலீஸ்காரன் வீட்டு பிள்ளையாவது ஒழுங்கா படிச்சிட்டு போகும். இவங்க கையில சிக்கினா அந்த பையன் படிக்கிற வாய்ப்பே இல்ல.
சஸ்பென்ஸ்? திரில்?
ஒருத்தனும் இல்ல. ஹீரோ போலீஸ்ல மாட்டிக்குவாரு. மாட்டியத விட ஈஸியா தப்பிச்சு வெளிய வந்துருவாரு. போலீஸ் எப்படி இவரை ட்ராக் பண்றாங்கன்னு ஒரு கணக்கும் இல்ல. GPS-ஆ? UPS-ஆ? மேம்போக்காக எழுதி வச்சிருப்பாங்க.
படம் முடியற வரைக்கும் யார் வில்லன்னு தெரியாது. இவங்க பண்ண அக்கிரமங்களை எல்லாம் பண்ணிட்டு, இவங்களை பிடிக்க வர்ற போலீஸை வில்லன்னு எழுதி வச்சிருக்காங்க. அந்த போலீஸ் கேரக்டர் டூப்ளிகேட் எஸ்.ஜே.சூர்யா மாதிரி. அவர் மட்டும் கொஞ்சம் நல்லா நடிச்சிருக்காரு.
ஊர் ஊரா காட்டுறது ஏன்?
பெரிய டைரக்டர் படங்கள் சாப்டர் சாப்டரா போகும்னு எதிர்பார்த்தோம். இங்க அதெல்லாம் இல்ல. திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம்னு ஊர் ஊரா காட்டுறாங்க. எந்த ஊர காட்டினாலும் ஒரே கதைதான். எதுக்கு காட்டினாங்கன்னு தெரியல.
மியூசிக்
அனிருத் மூணு-நாலு இங்கிலீஷ் பாட்டு போட்டிருக்காரு. பின்னணி மியூசிக் முழுக்க கர்நாடக கிளாசிக். தியேட்டர் வெளியில நின்னு கேட்டா “சங்கராபரணம் ஓடுது”னு தோணும். உள்ள போய் பாத்தா 30-35 பேரை வெட்டி குத்தி கொலை பண்ணிட்டு இருப்பாங்க. மியூசிக் தனியா ஓடும், வன்முறை தனியா நடக்கும். இரண்டும் சேர்ந்த மாதிரி தெரியல.
லோகேஷ் நடிப்பு
மூஞ்சி முழுக்க முடி வச்சு மூடிக்கிட்டு புதருக்குள்ள இருந்து எட்டி பார்க்கிறார். தண்ணி அடிக்கிறார். சிகரெட் பிடிக்கிறார். இல்லன்னா யாரையாவது வெட்டுறாரு. இதுல நடிப்பு எங்க இருக்கு? ஒரு முகபாவனையும் தெரியல, ஒரு நடிப்பும் தெரியல.
முடிவுரை : அருண் மாதேஸ்வரனும் லோகேஷ் கனகராஜும் ஜாடிக்கு ஏத்த மூடி மாதிரி செட் ஆயிட்டாங்க. “நீ படம் எடுத்தாலும் இப்படிதான் எடுக்கப் போற. நான் எடுத்தாலும் இப்படிதான் எடுக்கப் போறேன். நீ ஹீரோவா நடி, நான் டைரக்ட் பண்றேன்”னு ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல இந்த படம் வந்திருக்கு.
அடுத்த வருஷம் Part 2 “Marvel”னு கூட வரலாம். ஜென்சி கிட்ஸ்க்கு இது ரொம்ப பிடிக்கும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.
நீங்களும் முட்டாள் ஜென்சியா இருந்தீங்கன்னா மிஸ் பண்ணாம பாருங்க.
மீதி எல்லாரும் தியேட்டர்ல தூங்கிட்டு வந்துடலாம்.
Summary : DC, directed by Arun Matheswaran and starring Lokesh Kanagaraj, follows a small group that intercepts a vehicle carrying arms. A family’s funds for their son’s English-medium education are taken at a police checkpoint. The group feels responsible and confronts the authorities. The narrative drifts into romantic episodes and repeated action sequences with little logic or suspense. Music and performance receive mixed notes, with the film aimed at younger viewers.
