DC திரைவிமர்சனம்! நீங்க முட்டாள் என்றால் படத்துக்கு போகலாம்!
அருண் மாதேஸ்வரனும் லோகேஷ் கனகராஜும் சேர்ந்து படம் எடுக்கறதுக்கு கதை வேணாம், வசனம் வேணாம். தேவையானது ஒரே ஒரு லிஸ்ட் தான். டாட்டா சால்ட் 10 மூட்டை (இதுதான் ஹெராயின்/கொக்கைன்), துருப்புடிச்ச கத்தி, கோடாரி, ஸ்க்ரூ டிரைவர், ஸ்பேனர், மிலிட்டரிலயும் போலீஸ்லயும் இல்லாத அட்வான்ஸ்டு துப்பாக்கிகள், அழுக்கு பிடிச்ச பழைய கட்டடங்கள், பழைய அம்பாசடர் கார், மெட்ரோ டோர் வேன், புழுதி பறக்கிற ரோடு, 10 நாளா பல் விளக்காம குளிக்காம இருக்கிற ஆட்கள். இவங்களை தட்டினாலே தூசி பறக்கணும். இவ்ளோதான். இந்த லிஸ்ட்டை வச்சுதான் ‘DC’ பிறந்திருக்கு. இயக்குநர்: அருண் மாதேஸ்வரன் நட்சத்திரம்: லோகேஷ் கனகராஜ் கதை என்ன? ஒரு சின்ன போராளி குழு. அதில் லோகேஷ் முக்கிய ஆள். போலீசுக்கு ஆயுதம் சப்ளை ஆகிற வேனை பாலத்துல மடக்குறாங்க. ஆயுதங்களை எல்லாம் எடுத்துக்கிட்டு போயிடுறாங்க. அந்த பாலத்துலயே போலீஸ் செக் போஸ்ட் போட்டு நிக்குறாங்க. அங்க ஒரு அப்பா, அம்மா, ஸ்கூல் பையன் நடந்து வராங்க. பையனை இங்கிலீஷ் மீடியத்துல சேர்க்க 7 லட்சம் ரூபாய் எடுத்துக்கிட்டு வராங்க. செக் போஸ்ட்ல இருக்கிற போலீஸ் அதிகாரி அந்த 7 லட்சத்துக்காக அப்பாவை கொலை பண்ணிடுறான்...