“வெளிநாட்டில் கணவன்..” நண்பனின் மனைவி என தெரியாமலே உல்லாசம்.. ரகசியம் உடைந்தது எப்படி?

மலைப்பாதையில் கிடந்த ஒரு பெரிய சூட்கேஸ். அதிலிருந்து வந்த கடுமையான வாசனை. தற்*லை என்று நினைத்து வந்தவர்கள் கண்டது வேறொரு உண்மை. அந்த உண்மை ஒரு குடும்பத்தின் ரகசியத்தை முழுவதுமாக வெளிப்படுத்தியது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் கடந்த எட்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவார்.

வந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரம் தங்கிவிட்டு மீண்டும் சென்றுவிடுவார். வீட்டில் தனியாக வாழ்ந்த அவரது மனைவி அஞ்சலிக்கு அந்த தனிமை மெல்ல மெல்ல சுமையாக மாறியது.

அப்போதுதான் அவருடைய நெருங்கிய தோழி கவிதாவின் ஆலோசனை வந்தது. “வீட்டில் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். உனக்கு பணமும் வேண்டும், உன் தனிமையும் நீங்க வேண்டும்” என்ற வார்த்தைகள் அஞ்சலியை தவறான பாதைக்கு இழுத்தன.

ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும், வீட்டில் கண்காணிப்பு இல்லாததால் அவர் அந்த வழியில் தொடர்ந்தார். பணம் கிடைத்தது. தனிமை குறைந்தது. ஆனால் அதனுடன் குடிப்பழக்கமும் வந்து சேர்ந்தது.

ஒருநாள் வெளிநாட்டிலிருந்து திரும்பிய ரமேஷ், தன் நண்பர் வினோத் சர்மாவை சந்திக்க அழைத்தார். வினோத் அஞ்சலியின் வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி.

கடந்த வாரம் தான் சந்தித்த பெண் இவர்தான். அடையாளங்கள் அனைத்தும் பொருந்தின. “என் நண்பனுக்கு இப்படி ஒரு மனைவியா?” என்று உள்ளுக்குள் நடுங்கினார் வினோத்.

அஞ்சலியும் அதேபோல் அதிர்ந்தார். கடந்த வாரம் தன்னுடன் இருந்த நபர் தன் கணவரின் நண்பர் என்று தெரிந்ததும் அவர் முகம் வெளிறிப்போனது. ஆனால் வினோத் அந்த உண்மையை ரமேஷிடம் சொல்லவில்லை. மறைத்துவிட்டார்.

ரமேஷ் மீண்டும் வெளிநாடு சென்ற பிறகு வினோத் அஞ்சலியை தொடர்பு கொண்டார். “நீ தொடர்ந்து என்னுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் உன் கணவரிடம் சொல்லிவிடுவேன்” என்று மிரட்டினார். ஆரம்பத்தில் அஞ்சலி பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மன அழுத்தம் அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் அஞ்சலி சொன்னார், “உனக்காக நான் கொடுக்கும் நேரத்தை வேறு ஒருவருக்கு கொடுத்திருந்தால் எனக்கு அதிக பணம் கிடைத்திருக்கும். இனிமேல் வந்தால் பணம் கொடுக்க வேண்டும்.”

இந்த வார்த்தைகள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்தை உருவாக்கின. அன்று இருவரும் குடித்திருந்தனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அந்த சண்டையில் வினோத் உயிரிழந்தார். வினோத் உயிரிழந்தது தெரியாமல், மது போதையாலும்ம், வினோத்தின் தாக்குதலில் வலியாலும் வெறி அடங்காத அஞ்சலி வினோத்தின் தனி உறுப்பை துண்டித்து வீட்டின் வெளியே இருந்த நாய் கூட்டத்தின் நடுவே வீசியுள்ளார்.

அதன் பிறகு, மது போதை தெளிந்த நிலையில், இரவு முழுவதும் பயத்தில் உறைந்திருந்த அஞ்சலி, விடியும் முன் தன் தோழி கவிதாவை அழைத்தார். இருவரும் சேர்ந்து சம்பாதித்த பணம், பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் அவர்களை பிணைத்திருந்தன. கவிதா உதவ முன்வந்தார்.

காலை நான்கு மணிக்கு கவிதா தன் காரை எடுத்துக்கொண்டு வந்தார். வினோதின் உடலை ஒரு பெரிய சூட்கேஸில் அடைத்து காரின் பின்புற பெட்டியில் வைத்தனர். சுற்றுலா செல்வது போல காரை ஓட்டி சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலைப்பகுதிக்கு சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சாலையோர மலை இடுக்கில் சூட்கேஸை தூக்கி வீசினர்.

சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் கடுமையான வாசனை பரவியது. தற்*லை நடந்திருக்கலாம் என்று போக்குவரத்து காவலர்கள் தகவல் கொடுத்தனர். வந்த தீயணைப்பு வீரர்கள் சூட்கேஸை கண்டனர். திறந்து பார்த்தபோது உள்ளே ஒரு ஆணின் உடல் இருந்தது. ஆனால், அந்த நபரின் தனி உறுப்பு வெட்டப்பட்டிருந்தது.

சூட்கேஸில் எந்த ஆவணமும் இல்லை. ஆனால் இறந்தவரின் சட்டை ரெடிமேட் அல்ல. தையல்காரர் கடையில் தைத்த சட்டை. அந்த தையல்காரர் கடை சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது.

காவல்துறையினர் அந்த தையல் கடைக்கு சென்றனர். சட்டையை யார் தைத்தது என்று கேட்டபோது வினோத் சர்மாவின் பெயர் வெளியானது. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள், வினோதின் செல்போன் அழைப்பு வரலாறு ஆகியவை சேகரிக்கப்பட்டன. அந்த ஆதாரங்கள் காவல்துறையை அஞ்சலி மற்றும் கவிதாவிடம் கொண்டு சென்றன.

ஒரு தனிமையான வாழ்க்கை, தவறான ஆலோசனை, மறைக்கப்பட்ட உண்மை, பயத்தின் காரணமாக எடுக்கப்பட்ட தவறான முடிவு — இவை அனைத்தும் ஒரு மலைப்பாதையில் கிடந்த சூட்கேஸில் முடிந்தன. காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Summary in English : A man working overseas eight years left his wife lonely. A friend led her into secret work. Husband's friend recognized her, hid truth, later pressured her. Quarrel ended in his death. Women placed him in suitcase, drove 400 km to hills. Police traced case via Chhattisgarh tailor-made shirt and phone records.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.