Jyothika
Jyothika

சினிமாவை விட்டே போன 7 நடிகர்கள்.! – ஜோதிகா-வை உருகி உருகி காதலித்த நடிகர்..!

சினிமா பல்வேறு நடிகர்களை பார்த்திருக்கிறது தங்களுடைய இளம் வயதிலேயே சினிமாத்துறைக்குள் நுழைந்து வருடம் தோறும் இரண்டு அல்லது மூன்று மடங்கு கொடுத்து போராடி இன்று மக்கள் மத்தியில் தனக்கென தனி மார்க்கெட் உருவாக்கி வைத்துள்ள நடிகர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவர்களுக்கு நிலையான மார்க்கெட் இருக்கிறது அவர்களுடைய படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் சில நேரங்களில் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவில் திடீரென சில நடிகர்கள் முதலில் உச்சிக்கு செல்வார்கள்.

அடுத்தடுத்த சில வருடங்களில் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போய்விடுவார்கள் அப்படி ஒரு சில படங்களிலேயே நடித்து புகழின் உச்சிக்கு சென்று தற்போது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போய் இருக்கும் முக்கியமான ஐந்து நடிகர்களை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

நடிகர் பிரசாந்த்

ஒரு காலத்தில் நடிகர்கள் விஜய் அஜித் ஆகியோருக்கு பெரும் போட்டியாக இன்னும் சொல்லப்போனால் அவர்களை விடவும் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த் இவர் நடிப்பில் வருடத்திற்கு மூன்று படங்கள் வெளியாகி விடும் இவருக்காக தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.

Prashanth
Prashanth

குறிப்பிடும்படியாக பெண் ரசிகைகள் இவருக்கு ஏராளமானவர் இருந்தனர் ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய கதை தேர்வில் கோட்டை விட்ட நடிகர் பிரசாந்த் ஆட்கள் செல்லச் செல்ல தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து சினிமாவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார்.

மட்டுமில்லாமல் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் இவருடைய சினிமா வாழ்க்கைக்கு உலை வைத்து விட்டது தற்பொழுதும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்றாலும் கூட 90களில் இவருக்கு இருந்த அந்த மவுசு என்பது தான் நிதர்சனம்

ஸ்ரீகாந்த்

சினிமாவில் நடிக்க ஆரம்பித்து சில படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் ஸ்ரீகாந்த் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தன ஜனரஞ்சகமான படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் ஸ்ரீகாந்த் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக சினிமா வாழ்க்கையில் தன்னுடைய தடுமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

Srikanth
Srikanth

குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விஜய் அஜித் ரஞ்சித்துக்கு புகழ்பெற்ற நடிகர் ஸ்ரீகாந்த் ஆட்கள் செல்லச் செல்ல படத்தில் நடித்தால் போதும் என்று நினைத்து தள்ளப்பட்டார் தற்பொழுதும் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

2000 ஆண்டு வாக்கில் இவர் இருந்த மவுசுக்கு அதே நிலையில் நீடித்திருந்தால் தற்போது விஜய் அஜித்திற்கு போட்டியாக முன்னணி நடிகராக இருந்திருப்பார் என்பது 90 கிட்ஸ் மட்டுமே தெரிந்த ரகசியம்.

ஜீவன்

வில்லன் நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் ஜீவன் ஒரு கட்டத்தில் ஹீரோவாக கலக்க ஆரம்பித்தார் இவருடைய யுனிவர்சிட்டி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது இந்த திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Jeevan
Jeevan

காக்க காக்க திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக கலக்கினார் அதன் பிறகு நான் அவன் இல்லை நான் அவன் இல்லை இரண்டாம் பாகம் திருட்டுப் பயலே உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்தது.

தமிழ் சினிமாவில் வேற லெவலுக்கு செல்லக்கூடிய ஆற்றல் இவருக்கு இருக்கிறது என கணித்தார்கள் ஆனால் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கவில்லை தற்போது சில பல பணக்கஷ்டங்களை தாண்டி படங்களை தயாரிக்கும் பணியில் இறங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது

அப்பாஸ்

நடிகர் அப்பாஸை பார்க்கும் போதெல்லாம் ஒரு காலத்துல எப்படி இருந்தா மனுஷன் என்று 90ஸ் கிட்ஸ் அடிக்கடி புலம்புவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் அந்த அளவுக்கு சினிமா துறையில் முக்கியமான ஒரு நடிகராக அப்பாஸ் பார்க்கப்பட்டார்.

குறுகிய காலத்திலேயே இவருக்கு முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் ஒரு காலத்தில் சினிமாவில் இருந்த ஆர்வம் இவருக்கு சினிமா சார்ந்த வளாகலை நடத்துவது கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது உள்ளிட்ட விஷயங்களில் சென்றது ஒரே நேரத்தில் 10 படங்களுக்கு மேல் கால் சீட்டை கொடுத்து பெரிய பிரச்சனைகள் சிக்கியவர்.

Abbas
Abbas

இதுதான் இவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய தவறு என கூறலாம் பத்து படங்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்து அட்வான்ஸ் வாங்கி விட்டார் ஆனால் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின இதனால் பயந்து போன அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பாளர்கள் கொடுத்த அட்வான்ஸ் கொடுத்தார் தம்பி என்று ஜகா வாங்கினார்கள் சினிமா என்பது ரசிகர்களை மகிழ்விக்க என்பதை புரிந்து கொள்ளாமல் பட வாய்ப்புகள் உள்ளவரை கல்லாக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவை அப்பாஸ் எடுத்தது தான் இவருடைய தோல்விக்கு காரணம்.

எனவே தான் முன்னணி நடிகர்கள் யாரும் ஒரு படத்திற்கு மேல் கால் சீட் கொடுக்க மாட்டார்கள் ஆனால் அப்பாஸ் ஒரே நேரத்தில் 10 படத்திற்கு கால் சீட் கொடுத்து வில்லங்கத்தை விலைக்கி வாங்கி விட்டார். தற்பொழுது வெளிநாடுகளில் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் என்று கூறுகிறார்கள்.

நடிகர் வினித்

பன்முக திறமை கொண்ட ஒரு நடிகர் என்றால் அது நடிகர் வினித் என்று கூறலாம் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய பிரபலத்தை எட்டியவர் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்க போகிறார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இருந்தாலும் கூட வசூல் ரீதியாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் நடிகர் வினித்.

Vineeth
Vineeth

சந்திரமுகி படத்தில் நடிகை ஜோதிகா-வின் பூர்வ ஜென்மத்தில் அவரை உருக உருக காதலித்த காதலராக நடித்திருந்தார் நடிகர் வினித். நிஜத்திலும் இருவரும் சரியான ஜோடி. இருவரும் நிஜத்திலும் காதலிக்கிறார்களோ என்று கூறும் அளவுக்கு இந்த படம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நவ்தீப்

அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு சில திரைப்படங்களில் வில்லன் நடிகராகவும் நடித்தார் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என கணிக்கப்பட்டது.

Navdeep
Navdeep

ஆனால் போதுமான பட வாய்ப்புகள் இல்லாமல் திரைத்துறையிலிருந்து மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டார் நடிகர் நவ்தீப் கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அசல் திரைப்படத்தில் கல்லூரி மாணவராக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் ரவி கிருஷ்ணா

2004 ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல அங்கீகாரம் பெற்றவர் இந்த திரைப்படத்தில் இவர் நடித்த விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பு பெறவில்லை.

Ravi Krishna
Ravi Krishna

குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சுக்கிரன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் இந்த படத்தில் நடிகர் விஜய் கூட சிறு வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார். ரவி கிருஷ்ணா தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். எப்படி இருக்க போகிறது இவருடைய இரண்டாவது சுற்று என்பதை பொறுத்திருந்து பார்ப்போமே.

   

--Advertisement--