Actress | நடிகைகள்
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ரூபா ஸ்ரீயா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
நடிகை ரூபா ஸ்ரீ தமிழ் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இவர் கடந்த 1992ஆம் ஆண்டு கல்லணை போலீசும் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சந்தனமாதா என்ற மலையாள தொலைக்காட்சி சீரியலில் நடித்தார் இந்த சீரியல் ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த சீரியலில் ஊர்மிளா தேவி என்ற கதாபாத்திரமாக கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. இதனால் இவரை பலரும் ஊர்மிளா தேவி என்றே கொண்டாடினார்கள்.
தன்னுடைய 13 வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தொடர்ந்து ஹீரோயினாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சில திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார் தமிழில் 1993-ஆம் ஆண்டு வெளியான இதய நாயகன் என்ற படத்தில் ரூபா என்ற பெயரில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பொண்டாட்டியை என் தெய்வம், தாட்பூட் தஞ்சாவூர், டூயட், எல்லாமே என் ராசாதான், கங்கைக்கரை பாட்டு, டியர் சன் மருது, வெற்றி முகம், புதையல், கடவுள், ஜானகிராமன், எட்டுப்பட்டி ராசா, சின்ன ராஜா, வானவில் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பல சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா கல்யாணம் என்ற மலையாள தொடரிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா என்ற தொலைக்காட்சித் தொடரிலும் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் இளம் வயதில் கவர்ச்சி உடையில் நடித்து உள்ள சில புகைப்படங்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர்.
--- Advertisement ---

You must be logged in to post a comment Login