“6-ம் வகுப்பு படிக்கும் போதே நான் அதை பண்ணிட்டேன்..” – கூச்சமே இல்லாமல் கூறிய ஐஸ்வர்யா லட்சுமி..!

பொன்னியின் செல்வன் படத்தில், பூங்குழலி கேரக்டரில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi)  இவர், ஏற்கனவே தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். இதில் விஷ்ணு விஷால் உடன் நடித்த கட்டாகுஸ்தி படம், இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது.

ஆனால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த படம் என்றால், அது பொன்னியின் செல்வன்தான். மணிரத்னம் இயக்கிய இந்த படத்தின் இரு பாகங்களிலும், ஐஸ்வர்யா லட்சுமிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது. அதனால், தனது திறமையை அவர் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

ஐஸ்வர்யா லட்சுமி
Aishwarya Lekshmi

நடிகைகளில் சாய் பல்லவி, மருத்துவம் படித்தவர். அதேபோல், இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரும் பல் மருத்துவம் படித்தவர். இவர்களை போலவே, ஐஸ்வர்யா லட்சுமியும் மருத்துவ படிப்பு படித்து, பட்டம் பெற்றவர்.

இது ரசிகர்கள் பலரும் அறியாத புதிய தகவல். ஆனால், மருத்துவம் படித்து விட்டு ஸ்டெத்தாஸ்கோப் எடுக்காமல், வீடியோ காமரா முன் நின்று நடிக்க வந்துவிட்டார்.

ஐஸ்வர்யா லட்சுமி
Aishwarya Lekshmi

மலையாள படவுலகில்தான், 2017ம் ஆண்டில் இவரது சினிமா பயணம் துவங்கியது. அதன்பின் தமிழில் ஆக்‌சன், புத்தம்புது காலை விடியாதா, கார்கி, ஜகமே தந்திரம், கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

எனினும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகே, ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது தமிழில், மலையாளத்தில், தெலுங்கில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத்துவங்கிய நிலையில், நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும் பணியில் அவர் இருந்து வருகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி
Aishwarya Lekshmi

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.நடிகர்களில் எனக்கு விஜய், அபிஷேக் பச்சன் ஆகியோரை மிகவும் பிடிக்கும்.

என்னுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமான கேரக்டர்களில் நடிப்பதில், மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். சினிமாவில் வில்லி கேரக்டரில் நடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை.

ஐஸ்வர்யா லட்சுமி
Aishwarya Lekshmi

சின்ன வயதில், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது காதல் ஏற்பட்டது. அப்போது, நான் 6ம் வகுப்புதான் படித்துக்கொண்டு இருந்தேன். அந்த சின்ன வயதில் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

ஆனால், சில ஆண்டுகளுக்கு பின், அந்த உணர்வு போய்விட்டது. இப்போது நான் கிரிக்கெட் கூட பார்ப்பது இல்லை, என்று கூறி இருக்கிறார். 6ம் வகுப்பு படிக்கும்போதே, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை காதலித்ததாக ஐஸ்வர்யா லட்சுமி கூறியிருப்பது, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.