பாலாவுடன் பிரச்சனை வந்த நேரத்தில் அஜித்தை கைவிட்ட விஜயகாந்த்.. பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!

பாலாவுடன் பிரச்சனை வந்த நேரத்தில் அஜித்தை கைவிட்ட விஜயகாந்த்.. பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!

நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் துவக்கத்தில் புரட்சிக்கலைஞர் என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் கேப்டன் அழைக்கப்பட்டார், அந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

ஆனால் அவரது நண்பர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் அவர் விஜி தான்.

விஜயகாந்த்

விஜயகாந்தை பொருத்தவரை எம்ஜிஆருக்கு பிறகு யாரை பார்த்தாலும், சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாலும் அவர் மறக்காமல், தவறாமல் கேட்கிற ஒரு வார்த்தை சாப்பிட்டீங்களா என்பதுதான்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பழக்கம். அவரை சந்திக்க சென்றால், யாரையும் உணவு சாப்பிடாமல் திரும்ப அனுப்ப மாட்டார் எம்ஜிஆர்.

அதேபோல், நடிகர் விஜயகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே விதமான சாப்பாடுதான் வழங்கப்பட வேண்டும்.

காலையில் டிபன், மதியம் அசைவ விருந்து, மாலை டிபன், இரவு அசைவ உணவு வகைகள் என தடபுடலாக விருந்து போல பரிமாறப்படும்.

எம்ஜிஆர் பாணி

ஒரு கட்டத்தில் இது தயாரிப்பாளருக்கு செலவை அதிகப்படுத்தும் என்றால் அதற்கான செலவை, எனது சம்பளத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவதுதான் விஜயகாந்த் பழக்கம்.

இதுவும் எம்ஜிஆரின் பாணிதான். அவர் எப்போதுமே தொழிலாளி, முதலாளி என்ற பாகுபாடு பார்க்க மாட்டார். தனக்கு வழங்கப்படும் உணவு போலவே, அனைவருக்கும் வழங்கப்படுகிறதா என்பதை கவனிப்பார்.

அப்படி இல்லை என்றால், தயாரிப்பாளரை அழைத்து பேசி விடுவார். தயாரிப்பாளர் செலவு அதிகம் என பீல் செய்தால், உடனே தனது சம்பளத்தில் ஒரு பெரும்பகுதியை அவருக்கு தந்து விடுவார்.

அஜீத்குமார்

அப்படிப்பட்ட எம்ஜிஆர் பாணியில் இருந்த விஜயகாந்தை பலரும், கருப்பு எம்ஜிஆர் என்றே அழைத்தனர். நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்த போது, நடிகர் சங்க கடனை அடைத்தார். நிறைய நடிகர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை சுமூகமாக தீர்த்து வைத்தார்.

ஆனால் அவர் மறைந்த போது நடிகர் அஜீத்குமார் நேரில் வரவில்லை. ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் ஆறுதலும் சொல்லவில்லை.

டைரக்டர் பாலா

இதுகுறித்து வலைப்பேச்சு சக்திவேல் ஒரு நேர்காணலில் கூறுகையில், நான் கடவுள் படத்தில் நடிக்க முதலில் கமிட் ஆனது அஜீத்குமார்தான். அந்த படத்தின் கதையை சொல்லாமல் டைரக்டர் பாலா இழுத்தடித்தார். அப்போது ஓட்டல் ஒன்றில், டைரக்டர் பாலா அஜீத்குமாரை தாக்கியதாக தகவல் பரவியது. ஆனால் அதுகுறித்து விஜயகாந்த் எதுவும் விசாரிக்கவில்லை.

இந்த விஷயத்தில் அவர் அஜீத்குமாருக்கு உதவவில்லை என்பதால்தான், அஜீத்குமார் இப்படி நடந்துக்கொண்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த பிரச்னை விஜயகாந்த் காதுகளுக்கு புகாராக சென்றிருந்தால் நிச்சயமாக நேரில் அழைத்து விசாரித்து இருப்பார் என்றும் வலைப்பேச்சு சக்திவேல் கூறியிருக்கிறார்.

பாலாவுடன் பிரச்சனை வந்த நேரத்தில் அஜித்தை கைவிட்டார் விஜயகாந்த் என்பதால்தான் அவரது மறைவுக்கு வரவில்லையோ என்று இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

   

--Advertisement--