அஜித் வைத்த கோரிக்கை..! அதிர்ச்சி அடைந்த பிரேமலதா விஜயகாந்த்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட தனிப்பெரும் நடிகராக திகழ்ந்த, கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் மறைவால் தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது.

இந்நிலையில் கேப்டனின் இறுதி அஞ்சலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மட்டுமல்லாமல், பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு அவருக்கு உரிய மரியாதையை செலுத்தினார்கள். மேலும் அன்னாரது உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு நேரில் வருவதற்கு சந்தர்ப்பம் அமையாத திரைத்துறையைச் சார்ந்தோர் கேப்டன் விஜயகாந்தின் குடும்பத்தாருக்கு அலைபேசியின் மூலம் இரங்கலை தெரிவித்ததோடு ஆறுதல் தரக்கூடிய வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

இதில் விஜயகாந்த் இறப்பிற்கு நேரில் வராத நடிகர் அஜித், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் வைத்த கோரிக்கையானது கடுமையான அதிர்ச்சியை அவரது குடும்பத்தின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

அட.. தல அஜித் அப்படி என்ன பிரேமலதா குடும்பத்தாரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார் என்ற செய்தி காட்டு தீ போல ரசிகர்களின் மத்தியில் பரவி ஆவலை அதிகரித்து விட்டது. அது குறித்த விரிவான பதிவை இந்த பதிவில் நீங்கள் படிக்கலாம்.

தமிழ் திரை உலகில் இன்று உச்சத்தை தொட்ட நடிகர்களில் ரசிகர்களால் தல என்று அழைக்கப்படக் கூடிய அஜித்குமார் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது கடுமையான உழைப்பால் அளப்பரிய சாதனைகளை திரை உலகில் செய்தவர். இவரும் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

அந்த வகையில் நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்திற்கான ஷூட்டிங்கில் வெளிநாட்டில் இருக்கக்கூடியவர், கேப்டன் மனைவி பிரேமலதாவிடம் தான் இந்தியா திரும்பி வந்த பிறகு அதிகாலை 3 மணி அளவில் நேரில் சந்திக்க முடியுமா? என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து துக்கம் விசாரிப்பதற்கு அதிகாலை அப்பாயின்மென்ட் கேட்ட அஜித் பற்றி என்ன சொல்வது என்று தெரியாமல் பிரேமலதா கடுமையான அதிர்ச்சியில் தத்தளித்து இருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையங்களில் அதிக அளவு பரவி இதற்கெல்லாம் அப்பாயின்மென்ட் ஃபிக்ஸ் செய்வார்களா? இது கூட தல அஜித்துக்கு தெரியாதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை முன் வைத்து ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

எனவே மறைந்து போன கருப்பு எம்ஜிஆரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத அஜித் துக்கம் விசாரிக்க எப்படி, இப்படி யோசித்தார். மேலும் அஜித்குமார் புரியாமல்  நடந்து கொண்டதை விதத்தை  பேசும் பொருளாய் மாற்றி விட்டார்கள்.

   

--Advertisement--