நாகேஷ் மகன் ஆனந்த் பாபுவை அவர் பெற்ற பிள்ளைகளே துரத்தி விட காரணம் தெரியுமா..?

நாகேஷ் மகன் ஆனந்த் பாபுவை அவர் பெற்ற பிள்ளைகளே துரத்தி விட காரணம் தெரியுமா..?

வாத்தியார் மகன் மக்கு, போலீஸ் மகன் திருடன், வக்கீல் மகன் குற்றவாளி போன்ற சிலேடைகளை போல, மக்கள் மத்தியில் புகழடைந்த சிறந்த ஒரு நடிகரின் மகன் மிக மோசமான மனிதராக குடும்பத்தில் நடந்துக் கொள்வதும் விசித்தரமானதாக இருக்கிறது. ஆனால் அதுதான் கசப்பான உண்மையாக நடந்திருக்கிறது.

நாகேஷ்

தமிழ் சினிமாவில் இப்போதும் பெருமைமிகு நடிகராக பார்க்கப்படுபவர் நகைச்சுவை நடிகர் நாகேஷ். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் மிக முக்கியமான காமெடி நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

ஆனந்த் பாபு

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவான் நாகேஷ் மகன்தான் ஆனந்த் பாபு. கடந்த 1986ஆம் ஆண்டில் டி ராஜேந்தர் இயக்கத்தில், தங்கைக்கோர் கீதம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து இளமை, பந்தம், கடமை, உதயகீதம், புது வசந்தம், புரியாத புதிர், புத்தம் புது பயணம், சேரன் பாண்டியன் வானமே எல்லை, ஆதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

1980, 90களில் வெளிவந்த தனது படங்களில், ஒரு நல்ல நடிகராக தன்னை வெளிப்படுத்தியவர். குறிப்பாக இவர் மிகச்சிறந்த நடனக் கலைஞர். டிஸ்கோ டான்ஸில் மிகச் சிறந்த வரவேற்பை பெற்றவர்.

கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை, தமிழில் நிறைய படங்களில் நடித்த ஆனந்த் பாபு, சமீபத்தில் விஜய் டிவியில் மௌன ராகம் என்ற சீரியலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகேஷ் மகன் ஆனந்த் பாபுவை அவர் பெற்ற பிள்ளைகளே துரத்தி விட காரணம் தெரியுமா..?

திருமணம்

ஆனந்த் பாபுவுக்கு கடந்த 1985 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் இவரது மகன் அஜய் தமிழ் சினிமாவில் இப்போது நாயகனாக நடித்து வருகிறார்.

குடிப்பழக்கம்

சினிமாவில் நல்ல நடிகராக, நல்ல டான்ஸராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஆனந்த் பாபு, ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். எந்நேரமும் போதையில் மிதந்தார். அதனால் தனது குடும்பத்தை சரியாக கவனிக்காமல் எப்போதும் குடிப்பது, போதையிலேயே கிடப்பது என்று தனது குடும்பத்தை அவர் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை.

இதையடுத்து ஆனந்த்பாபுவின் தந்தை நாகேஷ், குடும்பத்தை பராமரித்தார். மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை அவர் கவனித்துக் கொண்டார்.

இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஆனந்த் பாபுவின் மனைவி சாந்தி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார்.

அப்போது திருமணமான புதிதில் மூன்று மாதங்கள் மட்டுமே எங்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. அந்த மூன்று மாதங்கள் மட்டுமே குடும்பத்துடன் இணக்கமாக இருந்தார். அதன் பிறகு அவர் வீட்டிற்கே சரிவர வருவதில்லை. எட்டு ஆண்டுகளாக என் குழந்தைகளை கவனித்துக் கொள்வதில்லை. என் மாமனார் தான் என் குடும்பத்தை பார்த்துக்கொண்டார்.

நாகேஷ் மகன் ஆனந்த் பாபுவை அவர் பெற்ற பிள்ளைகளே துரத்தி விட காரணம் தெரியுமா..?

சொத்தை அழித்து விட்டார்

என் மாமனார் சொத்து முழுவதையும் குடித்து அழித்துவிட்டார். இப்போது என்னையும் என் குழந்தைகளையும் நிம்மதியாக வாழ விடாமல் எங்களை சித்ரவதை செய்கிறார், கொடுமைப்படுத்துகிறார் என்று கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து ஆனந்தபாபு அந்த குடும்பத்தை விட்டு விலகிய நிலையில், 2013ஆம் ஆண்டு முதல் அவரது குடும்பத்தை சேர்ந்த மனைவி, பிள்ளைகள் யாருமே அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள்.

வாழ்க்கையை இழந்து

ஒரு மிகப்பெரிய ஜாம்பவான் நடிகர் நாகேஷ் மகன் ஆனந்தபாபு, சொந்த வாழ்க்கையில், சினிமாத் துறையில் எவ்வளவோ சாதித்திருக்க வேண்டியவர், இப்போது தனது வாழ்க்கையை இழந்து ஆதரவற்று நிற்கிறார்.

துரத்தி விட காரணம்

ஆனந்த் பாபுவை அவர் பெற்ற பிள்ளைகளே துரத்தி விட காரணம் அவரது போதை பழக்கமும், குடும்பத்தை அவர் செய்த சித்ரவதைகளும்தான் என தெரிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர்.

நாகேஷ் மகன் ஆனந்த் பாபுவை அவர் பெற்ற பிள்ளைகளே துரத்தி விட காரணம் தெரியுமா..?