ஆனந்த்பாபு வாழ்க்கை… நடிகர்களுக்கு ஒரு பாடம்..!

நடிகர் ஆனந்த்பாபு ஒரு வாரிசு நடிகராவார். இவர் தமிழில் மிகச்சிறந்த காமெடியனாக திகழ்ந்த நடிகர் நாகேஷின் மகன் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவருக்கு மிகச் சிறப்பான நடனத் திறமை இருந்தது என்பது பல படங்களில் நடனம் ஆடியதின் மூலம் வெளிப்பட்டு உள்ளது.


இவரது சகாப்தத்தை பொருத்த வரை 1983 முதல் 1999 வரை பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்தவர். தனது வாழ்க்கையில் செய்த பெரும் தவறால் பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளாகி நடிக்க வாய்ப்பு இல்லாமல் ஒரு கட்டத்தில் திரை உலகை விட்டு வெளியே சென்றவர்.

நடிகர் ஆனந்த் பாபு..

நடிகர் ஆனந்தபாபு 1983 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கிய தங்கைக்கோர் கீதம் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆரம்பித்து திரை உலக வாழ்க்கையில் என்ட்ரி கொடுத்தார்.

இந்த முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததை அடுத்து 1984-ஆம் ஆண்டு 3 படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றியை பெற்றிருக்கிறார். அந்த படங்கள் கடமை, புயல் கடந்த பூமி, நியாயம் கேட்கிறேன்.


இதனை அடுத்து 1985-இல் பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்தின் மூலம் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் ஒவ்வொரு படத்திலும் தனது அசத்தலான நடன திறமையை வெளிப்படுத்தினார்.

--Advertisement--

இவரின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது உடலா அல்லது ரப்பரா என்று ஆச்சரியப்பட கூடிய அளவிற்கு வித்தியாசமான ஸ்டெப்புகளை நடனத்தில் புகுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த வெற்றிகனி, உதயகீதம், பார்த்த ஞாபகம் இல்லையா, விஸ்வநாதன் வேலை வேண்டும், இளமை, பந்தம், அர்த்தமுள்ள ஆசைகள், மௌனம் கலைகிறது, கடற்கரை தாகம், தாயா தாரமா, புரியாத புதி,ர் புதுவசந்தம், எதிர்காற்று, புதுப்புது ராகங்கள் போன்ற படங்கள் இவரது பெயர் சொல்லும் படி இருக்கும்.

அத்தோடு 1997-இல் ரோஜா மலரே 1998-இல் சந்தோஷம் 1999-இல் அன்புள்ள காதலுக்கு 2009-இல் ஆதவன், மதுரை சம்பவம், ஒளியும் ஒளியும் 2012-ல் ஏதோ செய்தால் என்னை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

ஆனந்த்பாபுவின் வாழ்க்கை..

இந்நிலையில் ஆரம்ப நாட்களிலேயே பல வெற்றி படங்களில் நடித்த இவரோடு நண்பர்கள் என்ற போர்வையில் வேண்டாத சகவாசம் கிடைத்ததை அடுத்து பாதை மாறிய ஆனந்த்பாபு சரியான சமயத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட் வராமல் போதைக்கு அடிமையானார்.


அதுமட்டுமல்லாமல் ஒரு காலகட்டத்தில் தன்னை கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும் பிரிந்து தனித்து வாழ ஆரம்பித்த இவர் தன்னுடைய பெயர், புகழ் மட்டுமல்லாமல் தீய பழக்கவழக்கத்தால் சம்பாதித்த பணம், சொத்து என எல்லாவற்றையும் தொலைத்தார்.

இதனை அடுத்து இவரது செல்வமும், செல்வாக்கும் மங்க, மங்க இவரோடு தொடர்ந்து வந்த நண்பர்கள் அனைவரும் இவரை விட்டு விலக ஆரம்பித்த பின்பு தான் இவருக்கு உண்மை என்ன என்பது புரிய ஆரம்பித்தது. இவரின் நிலைமையை பார்த்தே நாகேஷ் இறந்து போனார் என்று கூட சொல்லலாம்.

நடிகர்களுக்கு ஒரு பாடம்..

ஒரு காலகட்டத்தில் உணவுக்கே கஷ்டப்பட்ட ஆனந்த் பாபுவை மீண்டும் அவரது மனைவி அவரோடு சேர்த்துக் கொண்டதை அடுத்து குடியிலிருந்து விடுபட 2006-ம் ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இதனை அடுத்து கெட்ட போதை பழக்கத்தில் இருந்து வெளி வந்த அவர் தற்போது தன் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். இவரது இளைய மகன் கஜேஷ் தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் கிறிஸ்துவ போதகராக மாறி இருக்கக்கூடிய ஆனந்த் பாபு அடிக்கடி கிறிஸ்துவ பிரசங்கங்களை சர்ச்சுகளில் செய்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு மன நிம்மதி கிடைப்பதாக கூட சொல்லி இருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் வெற்றிகரமான ஹீரோவாக திகழ்ந்த ஆனந்த் பாபு, ரஜினிகாந்த் போல சூப்பர் ஸ்டாராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட நட்பின் மூலம் தன் வாழ்க்கையை அழித்துக் கொண்டார்.


எனவே இவரது வாழ்க்கையானது எதிர்வரும் நடிகர்களுக்கு சிறந்த பாடமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

எனவே எந்த நிலையில் இருந்தாலும் கூடாத நட்பு மூலம் எல்லாவற்றையும் இழந்த ஆனந்த் பாபுவின் வாழ்க்கையை நினைத்து ஒவ்வொரு நடிகரும் குடிக்கு அடிமையாகாமல் இருப்பதின் மூலம் அவர்களது பெயர் மற்றும் புகழ் அத்தோடு சம்பாதித்த அனைத்தையும் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.