Anjali : பீரியட்ஸ் நேரத்தில் இதை பண்ண மாட்டேன்..! கூச்சமின்றி கூறிய அஞ்சலி..!

Anjali : பீரியட்ஸ் நேரத்தில் இதை பண்ண மாட்டேன்..! கூச்சமின்றி கூறிய அஞ்சலி..!

Anjali : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. பார்ப்பதற்கு எதார்த்தமான முகத்தோற்றத்தோடு இருக்கும் இவரது கண்கள் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விடக்கூடிய அளவு கவர்ச்சிகரமாக இருக்கும்.

தனது எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொண்ட இவர் மிகப்பெரிய அளவு முன்னணி நடிகையாக ஜொலிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்தது போலவே இவரது கதாபாத்திரங்களும் திரைப்படங்களில் அமைந்திருந்தது.

இதற்கு உதாரணமாக இவரது நடிப்பில் வெளிவந்த கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, இறைவி உள்ளிட்ட படங்களை கூறலாம். தனித்துவமான தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இடையில் சில காலம் காதலின் காரணமாக சினிமாவின் பக்கம் தடை காட்டாமல் இருந்து வந்த அஞ்சலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜான்சி, பாஃல் போன்ற தொடர்களில் நடித்து கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசிய இவர் பீரியட்ஸ் நேரத்தில் இதை கட்டாயம் பண்ண மாட்டேன் என்று கூச்சமின்றி கூறிய விஷயம் தற்போது அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற வைத்து விட்டது.

பொதுவாகவே ஒவ்வொரு பெண்களுக்கும் பீரியட்ஸ் நேரத்தில் பல வகையான வேதனைகள் ஏற்படும். இந்த அனுபவங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஒரு சிலருக்கு கடுமையான வலி இருக்கும். இதனால் எந்த விதமான வேலைகளிலும் அவர்களால் ஈடுபட முடியாது.

இன்னும் சில பெண்கள் அந்த நாட்களில் சாதாரணமான நாட்களில் எப்படி இருப்பார்களோ அப்படியே இருப்பார்கள். எனினும் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.

எனவே பீரியட்ஸ் நேரங்களில் ஈரமான உடை அணிந்து கொண்டு நடிப்பது போல இருக்கும் காட்சிகளிலும், மழை நீரில் நனைந்தபடி நடிக்கும் காட்சிகள் இருந்தால் கட்டாயம் அந்த சமயத்தில் படப்பிடிப்பு வேண்டாம் எனக் இயக்குனர்களிடம் கூறி அந்த மாதிரி நாட்களில் நடிப்பதை தவிர்த்து விடுவேன் என்பதை ஒளிவு மறைவின்றி தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து பீரியட்ஸ் நேரத்தில் இதைத்தான் இவர் பண்ண மாட்டேன் என்று கூச்சமின்றி கூறினாரா? என பேசிய ரசிகர்கள் அவர் கூறியதில் நியாயம் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டு அமைதி ஆகி விட்டார்கள்.

எனவே இது போன்ற நேரங்களில் பெண்களுக்கு முடிந்தவரை சிரமம் கொடுக்காமல் இருப்பது நல்லது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டால் அதுவே மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.