“ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள ஆன்மீக வார்த்தைகள்..! – இவ்வளவு விஷயம் இருக்கா!!

ஆன்மீக வார்த்தைகள்: ஆன்மீகம் என்ற பெயரில் நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளிலும் மிக அரிதான விஷயங்கள் புதைந்துள்ளது. அந்த விஷயங்கள் பற்றி யாருக்கும் அவ்வளவு தெரியும் என்று நாம் கூற முடியாது.

Spiritual words meaning

எனினும் இந்தக் கட்டுரையில் அதில் புதைந்துள்ள விஷயங்கள் என்னென்ன அது எந்தெந்த வார்த்தைகளில் புதைந்துள்ளது என்பதை  பற்றிய பதிவை பார்க்கலாம்.

 ஆன்மீக வார்த்தையில் புதைந்திருக்கும் விஷயங்கள்

எப்படிப்பட்ட உடலாக இருந்தாலும் அதில் பல கோடி ஜீவன்கள் இருக்கும். அந்த ஜீவன்களின் கூட்டுத் தொகுப்பான செல்களை தேவர்கள் என்று அழைக்கிறோம். இந்த செல்களை அழிக்கக்கூடிய பணிகளை செய்கின்ற நோய் கிருமியாக இருப்பவர்கள் அசுரர்கள். மேலும் மனித உடலானது முப்பத்து முக்கோடி தேவர்களின் கூட்டமைப்பே ஆகும்.

Spiritual words meaning

இறைவன், இறைவன் என்ற சொல் பஞ்சபூத சக்திகளை குறிப்பதாகும். இதற்கு தொடக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது. இதைத்தான் ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் என்று கூறி இருக்கிறார்கள்.

முனிவர் என்பவர் குண்டலி சக்தியை ஏற்றி பின் தவம் செய்ததன் மூலம் இறைவனிடம் நேரடியாக உபதேசத்தை பெற்றவர். எனவே இவர் எதார்த்தமாக சொல்லும் வார்த்தைகள் கூட சில சமயத்தில் பலிக்குமாம்.

தெய்வம் என்று சொல்லக்கூடிய சொல் உயிரைத் தான் குறிக்கிறது. இதனால் தான் உயிர் உள்ள அனைத்து வகை ஜீவராசிகளையும் நாம் வணங்குகிறோம்.

கடவுள் என்ற சொல் நவகிரகங்களை குறிக்கும் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் இவர்கள் காரணமானவர்கள். வாழ்க்கையில் ஏற்படும் லாபம், நஷ்டம், உயர்வு, தாழ்வு போன்றவை இவற்றின் மூலமே நமக்கு நடக்கிறது.

Spiritual words meaning

சாமி, என்பவர் நடந்தது நடப்பது, நடக்க இருப்பது போன்ற விஷயங்களை நமக்கு சொல்பவர். இவரை நீங்கள் சுவாமி என்று சொல்லக்கூடாது. ஏனெனில் சுவாமி என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை இதன் பொருள் எஜமான் என்பதாகும்.

ஆண்டவன் என்ற சொல்லுக்கான பொருள் சிறந்த முறையில் ஆட்சி செய்து மக்களை காத்தவன். எனவே தான் அவர்களை நாம் ஆண்டவன் என்று அழைக்கிறோம். மூலவர் என்பது கோயிலில் அமர்ந்து இருக்கும் தெய்வத்தை குறிக்கும். அதாவது நமது உடலில் இருக்கும் மூலாதார சக்கரம் என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இப்போது உங்களுக்கு இதை படித்துப் பார்த்ததின் மூலம் ஆன்மீக வார்த்தைக்குள் எத்தனை அர்த்தங்கள் உள்ளது என்பது புரிந்திருக்கும்.