“3 மாசம் தான் ஆகுது..” படுக்கையில் கீர்த்திக்கு இது சுத்தமா பிடிக்கல..! அப்போவே கல்யாணம் காலி..! அசோக் செல்வன் ஒப்பன் டாக்..!

ஒரு நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் அவர்களை நடிகர் அசோக் செல்வன் கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்து இருக்கின்றது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இருவரும் தங்களுடைய திருமணம் அதற்கு பிறகு தங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை பற்றி பேசி இருக்கிறார்கள்.

குறிப்பாக கீர்த்தி பாண்டியன் கூறிய சில விஷயங்கள் புதிதாக திருமண பந்தத்தில் இணைய உள்ள தம்பதிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஒரு பாடமாக அமையும் என கூறலாம்.

அவர் திருமணம் குறித்து நிறைய விஷயங்கள் பேசி இருந்தாலும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாக கூறினார்.

அது என்னவென்றால் திருமணத்திற்கு முன்பு ஒரு நபர் எப்படி இருக்கிறாரோ.. அவரை அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.. திருமணத்திற்கு பிறகு இவரிடம் இருக்கும் இந்த பழக்கத்தை நான் மாற்றி விடுவேன்.. இவரிடம் இருக்கும் அந்த பழக்கத்தை நான் மாற்றி விடுவேன்.. இதையெல்லாம் யோசித்துக் கொண்டு திருமண பந்தத்திற்குள் நீங்கள் நுழைகிறீர்கள் என்றால்.. அப்போதே உங்களுடைய கல்யாணம் காலி என்று அர்த்தம்.

ஒரு நபர் எப்படி இருக்கிறாரோ.. அப்படியே நீங்கள் அவரை கணவராக ஏற்றுக் கொள்கிறீர்கள்.. அவ்வளவுதான். திருமணத்திற்கு பிறகு நான் அதை மாற்றுவேன்.. இதை மாற்றுவேன்.. என்று நீங்கள் சிந்தித்துக்கொண்டிருந்தால் அது கட்டாயமாக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எனவே திருமணத்திற்கு முன்பே அனைத்தையும் பேசிக் கொள்வது சிறப்பு எனக்கு கூறி இருந்தார் கீர்த்தி பாண்டியன்.

தொடர்ந்து பேசிய அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனுக்கு படுக்கை படுக்கையில் ஈரமான துண்டு மற்றும் துணிகள் தேவையில்லாத பொருட்கள் கிடந்தால் சுத்தமாக பிடிக்காது. ஆனால், நான் எப்படியான ஆள் என்றால் படுக்கையில் அழுக்கு துணிகள்.. அது.. இது.. என நிறைய கிடைக்கும்,,, அவற்றையெல்லாம் நான் படுக்கும் அளவுக்கு மட்டும் அப்படியே மெதுவாக ஒதுக்கி விட்டு அந்த சிறிய இடம் கிடைத்தால் கூட அதில் படுத்து தூங்க கூடிய ஆள்.

ஆனால், கீர்த்திக்கு சுத்தமாக பிடிக்காது. நாட்கள் செல்ல செல்ல இதனை கீர்த்தியின் உடைய விருப்பங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள நான் பழகிக் கொண்டேன். தற்போது எல்லாம் படுக்கையை சுத்தமாக வைத்திருக்கிறேன்.

வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறேன். வாஷிங் மெஷின் ஓடி முடிந்து விட்டால் கீர்த்தி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நானே ஆடைகளை எடுத்து காய வைத்து விடுகிறேன். இதெல்லாம் ஒரு நல்ல மாற்றமாக எனக்கு தெரிகிறது.

எல்லா விஷயத்தையும் அவளே தான் வந்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் அவள் கண்டிப்பாக அந்த வேலைகளை செய்து விடுவாள்.

அவர் இல்லாத பொழுது மெஷினுக்குள்ளேயே துணிகள் கிடந்தால் சரியாக இருக்குமா.. என்ற யோசனை எனக்கு தற்போது வருகிறது. அதனால் நானே எடுத்து காய வைத்து விடுகிறேன் என்று கூறியிருந்தார்.

இதனை கேட்டு ரசிகர்கள் கல்யாணம் ஆகி மூணு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள இந்த அளவுக்கு மாற்றங்களா.. என்று இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும் திருமணம் ஆக உள்ள தம்பதிகளுக்கு இவர்களுடைய இந்த ஒரு பேட்டி நிச்சயமாக உதவிகரமாக இருக்கும்.. எப்படி இருக்கிறார்களோ.. அப்படியே ஏற்றுக்கொள்வது.. தான் திருமணம்..

அவரை இப்படி மாற்றுகிறேன்.. இவரை அப்படி மாற்றுகிறேன்.. என்று ஆள் மாற்றி ஆள் மாற்றிக் கொண்டிருந்தால்.. வாழ்வதற்கு நேரம் இருக்காது.. என்பதுதான் இருவருடைய இந்த பேச்சின் சாராம்சமாக இருக்கிறது.

இவர்களுடைய இந்த பேட்டி குறித்து உங்களுடைய கருத்து என்ன..? தவறாமல் கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.

   

--Advertisement--