Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முழு நிர்வாணமாக நடிகை பிந்து மாதவி..! – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிந்து மாதவி தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், கழுகு வாசப்படாத வாலிபர் சங்கம் பசங்க 2 கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

மட்டுமில்லாமல் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான ஒருவராக மாறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஏற்கனவே நடித்திருந்த கழுகு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

சத்திய சிவா இயக்கிய இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். பிக் பாஸ் முதல் சீசனில் வைல்ட் காடு முறையில் கலந்து கொண்ட நடிகர் பிந்து மாதவி பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க ஆசை இருப்பதாக கூறுகிறார். அதாவது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க ஆசையுடன் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை பிந்து மாதவி.

--Advertisement--

[irp posts=”67451″ ]

சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடித்த பேசிய பிந்து மாதவி தற்போது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை தயாரிக்கவும் இயக்கவும் திரைத்துறையினர் முன் வந்திருக்கிறார்கள். இது நடிகைகளுக்கு ஒரு ஆரோக்கியமான விஷயம்.

மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமாவுக்குமே இது ஒரு ஆரோக்கியமான விஷயமாக பார்க்கிறேன். மேலும் நடிகைகள் பட வாய்ப்புக்காக ஆடை இன்றி நடிக்க தயாராக இருக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.

அதில் குற்றச்சாட்டுவதற்கு எதுவும் கிடையாது. படத்தின் கதைக்கு தேவை என்பதால் அப்படி நடிக்கிறார்கள். ஒரு நடிகையின் வேலை அதுவாக தான் நான் பார்க்கிறேன்.

நடிகை அமலாபால் நடித்த ஆடை திரைப்படத்தை நான் மிகவும் வியந்து பார்த்தேன். அதற்காக அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தேன். மட்டுமல்லாமல் கதைக்கு தேவைப்பட்டால் நானும் கூட உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க தயாராக இருக்கிறேன் நல்ல கதை அமைந்தால்நான் மட்டுமல்ல சினிமாவை நேசிக்கக்கூடிய எந்த நடிகையாக இருந்தாலும் இதற்கு சம்மதம் தெரிவிப்பார் என்று பேசி இருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Summary in English :

Bindu Madhavi, an Indian actress and model, has recently shown her enthusiasm to perform to any extent necessary for the story of the film. She believes that an actor should be able to deliver their best performance no matter what the requirements are. With her dedication and hard work, she has been able to make a mark in the industry with her stellar performances in several films. Her willingness to go beyond her comfort zone and deliver extraordinary performances is commendable.

[irp posts=”67471″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top