Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“வாய்ப்புண்ணால் தொல்லையா..!”- இத ஃபாலோ பண்ணா ஈஸியா குணமாகும்…!

உடலில் ஏற்படக்கூடிய சூடு காரணமாக வாயில் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது .சூடு மற்றும் அல்ல உடலுக்கு தேவையான இரும்பு சத்தும் குறைபாடாக இருந்தாலும் கட்டாயம் அது உங்கள் வாய்களில் புண்கள் மூலம் பிரதிபலிக்கும்.

 அதுபோலவே பித்தமும் உடலில் அதிகரித்துவிட்டால் வாய்களில் புண்கள் தோன்றுவது இயல்பான ஒன்றுதான். அப்படி உங்கள் வாய்களில் ஏற்படக்கூடிய புண்ணை வீட்டில் இருந்தே எளிய முறையில் எப்படி குணப்படுத்தலாம் என்பதை எந்த கட்டுரையில் காணலாம்.

வாய்ப்புண் குணமாக்கும் எளிய முறை

 உங்கள் வாயில் இருக்கும் புண் குணமாக வேண்டும் என்றால் அதிக அளவு தண்ணீரை நீங்கள் குடிப்பது நல்லது. அதுவும் குளிர்ந்த நீரை குடிப்பதன் மூலம் விரைவில் வாய் புண் மாறிவிடும்.

 தேனில் பால் கலந்து பருகுவதின் மூலம் வாயில் உள்ள புண்கள் மிக எளிதில் குணமாகும். இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் நீங்கள் இதனை  செய்யலாம்.

உங்கள் வீட்டில் வெண்ணை இருந்தால் அந்த வெண்ணையை எடுத்து புண் இருக்கும் பகுதியில் தடவி விடலாம். அவ்வாறு செய்வதின் மூலம் வாய் புண் குணமாகும்.

--Advertisement--

 அதுபோலவே தேங்காய் துருவலை நன்றாக துருவி அதை வாயில் போட்டு மென்னு விடுங்கள். தேங்காய் பால் புண்ணில் படுவதின் மூலம் உன் மிக விரைவில் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 மலை நெல்லிக்காயை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்த பின் அந்த நீரினை நீங்கள் எடுத்து குடிப்பதோ அல்லது கொப்பளித்து துப்புவதின் மூலம் உங்கள் வாயில் இருக்கும் புண் குணமாகும்.

 சந்தைகளில் அதிக அளவு கிடைக்கக்கூடிய மணத்தக்காளி கீரையின் சாறை எடுத்து குடிக்கலாம் .அல்லது அந்த கீரையை பொரியலாக வைத்து சாப்பிட்டாலும் வாய்ப்புண் சரியாகும்.

அதுபோலவே அகத்திக் கீரையை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் வாய்ப்புண் குணமாகும். புதினா இலையின் எடுத்து அரைத்து அந்த பசையை உங்கள் வாய்ப்புண் இருக்கும் பகுதிகளில் போட்டு வந்தால் வாய்ப்புண் சரி ஆகிவிடும்.

 மாசி காயை உரைத்து பாலில் கலந்து உள்ளே குடிப்பது மூலம் குடல் புண்கள் மற்றும் வாய் புண் சரியாகும். மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் ஈசியாக ஃபாலோ செய்து உங்களுக்கு வாய்ப்புண் தொல்லையால் ஏற்படும் அவதியை நீங்கள் குறைத்து விடுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top