Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை – மு.க.ஸ்டாலின்

மார்ச் 1-ஆம் நாள் என்னுடைய 70-ஆவது பிறந்தநாளில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திரண்ட ஆயிரமாயிரம் உடன்பிறப்புகளின் வாழ்த்துகளிலும் அவர்கள் அளித்த அன்பளிப்புகளிலும் நெஞ்சம் நெகிழ்ந்தேன்.குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், பிற மாநில முதலமைச்சர்கள், பிற மாநில ஆளுநர்கள், இந்திய தேசிய காங்கிரஸின் மதிப்பிற்குரிய சோனியா காந்தி அம்மையார், சகோதரர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைப் பரிமாறினர் மு.க.ஸ்டாலின்.

திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க பொதுச் செயலாளரும் அன்பு நண்பருமான விஜயகாந்த்,  கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோரும், தமிழறிஞர்கள், பல்துறை வல்லுநர்களும் உளம் கனிந்த வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.  வெளிநாடுவாழ் தமிழர்கள், அயல்நாட்டுத் தூதர்கள் என எல்லைகள் கடந்து குவிந்த வாழ்த்துகளால் மானுடத்தின் பேரன்பு மழையில் நனைந்து மகிழ்ந்தேன் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் இந்த உழைப்பு, இந்திய ஒன்றியம் முழுவதும் தேவைப்படும் காலம் இது. சமூகநீதி எனும் நெடும்பாதையில் திராவிட இயக்கம் மேற்கொண்டுள்ள நெடும்பயணம் என்பது இந்திய ஒன்றியத்திற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வழிகாட்டியுள்ளது. சமூகநீதிக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக இந்திய அரசியல் சட்டம் முதல் முறையாகத் திருத்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களின் உரிமைக்கான குரலாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் முழங்கியவர் பேரறிஞர் அண்ணா. இந்திய அரசியலை நெருக்கடி சூழ்ந்தபோதெல்லாம் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராளியாக – இந்தியாவின் குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் தீர்மானிக்கும் தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

இன்று இந்தியாவை மதவாதப் பாசிச சக்திகள் சூழந்துள்ளன. பன்முகக்தன்மையைச் சிதைக்க நினைப்பவர்களின் கைகளில் நாடு சிக்கியிருக்கிறது. மாநில உரிமைகள் பறிபோகின்றன. 

தாய்மொழிகளை அழித்து ஆதிக்க மொழியினைத் திணிக்கும் பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்கிறது. எந்த ஒரு தனி மனிதரும் சுதந்திரச் சிந்தனையுடன் வாழ முடியாத நெருக்கடி சூழ்ந்துள்ளது. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது. 

--Advertisement--

அதனால்தான், இந்திய அளவிலான தலைவர்களின் பார்வை மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பியுள்ளது என மு க ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 இது போன்ற சுவாரஸ்யமான அரசியல் தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து கூறியுள்ளது.

Continue Reading
 

More in

Trending Now

To Top