Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தவறு செய்தால் கருட புராணம்.. எந்தெந்த செக்சனில் என்னென்ன தண்டனைகள் தெரியுமா?

சிவபுராணத்தில் சொன்ன ஏழு நிலைகளைக் கடந்து தான் மனிதப் பிறவியை நாம் எடுத்திருக்கிறோம். இந்த மகத்தான மனிதப் பிறவியை எடுப்பதற்கு எண்ணற்ற நன்மைகளை நாம் செய்திருக்க வேண்டும்.

 அப்படிப்பட்ட எந்த மனிதப்பிறவையை நாம் சரியான விதத்தில் பயன்படுத்தாமல் தவறு செய்யும் பட்சத்தில் என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதை கருட புராணத்தில் மிக அருமையான முறையில் விளக்கி இருக்கிறார்கள்.இதில்பகவான் விஷ்ணு கருடனுக்கு  எடுத்துக் கூறியதால் தான் இது கருட புராணம் என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

உங்கள்  தவறுக்கு கருட புராணம் அளிக்கும் தண்டனைகள்

பிற பொருள்களின் மேல் ஆசைப்பட்டு அந்த பொருளை அவர்கள் அறியாத நேரத்தில் களமவாடி வருபவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை எது தெரியுமா? இவர்கள் செல்லக்கூடிய நரகம் தாமிஸிர நரகம்  என்று அழைக்கப்படுகிறது.

 வீட்டில் தனக்கு என்று ஒரு பெண் மனைவியாக காத்திருக்கும் போது அவளை விடுத்து மற்றொருவரின் மனைவியின் மீது மோகம் கொண்டு அவளை அடையத் துடிக்க கூடிய நபர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை என்ன தெரியுமா? அநித்தாமிஸ்ர நரகம் ஆகும்.

 உயிர்வதை செய்பவர்கள் தனது ஆசைக்காக மற்றவர்களை கொலை செய்ய திட்டமிடுதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை என்ன தெரியுமா? இதுதான் கும்பீபாகம்.

--Advertisement--

ஒழுக்கம் இல்லாமல் கண்டபடி திரிந்து கிருமியை போல அடுத்தவர்கள் வாழ்வை சூனியமாக மாற்றுவதற்கு கிடைக்கக்கூடிய தண்டனை என்ன தெரியுமா? அதுதான் கிருமி போஜனம்.

 பணத்திற்காகவும் பதவிக்காகவும் அதிகார வேஷம் போட்டு கபடதாரியாக திரியக்கூடிய மனிதர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை என்ன தெரியுமா? வை தரணி

மற்றவர்களின் பொருட்களை கொள்ளை அடிப்பவர்களுக்கும் திருட்டு போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கும் பலாத்காரம் செய்பவர்களுக்கும் என்ன தண்டனை தெரியுமா? அதுதான் அக்னி குண்டம்

மது போதையால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் பல பாவங்களை செய்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை என்ன தெரியுமா? பரி பாதாளம்.

 பிராணிகளிடம் ஈவு இரக்கமில்லாமல் நடப்பவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா? பிராணி ரோதம்.

இதுபோல பல தவறுகளுக்கு பலவிதமான தண்டனைகளை கருட புராணத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இதை பார்த்தாவது இனி நாம் வாழ்நாளில் தவறுகளை குறைத்துக் கொண்டு வாழ்வதின் மூலம் இந்த பாவத்திலிருந்து நாம் தப்புவதற்கு முடியும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top