Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“முடி உதிர்தல் தடுக்க வேண்டுமா..!” – அப்ப இந்த மாதிரி எண்ணெய செஞ்சு யூஸ் பண்ணுங்க..!!

தலை முடி மீது அதீத அக்கறை எடுத்துக்கொண்டு பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் வகை வகையாக ஹேர் ஸ்டைல்களை செய்து அசத்தி வருகிறார்கள். அதற்காக பல வழிகளில் பணம் செலவழித்து வரும் இவர்கள் முடி உதிர்தல் பிரச்சனைகள் இருந்து தற்காத்துக் கொள்ள எண்ணற்ற வழிமுறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள்.

 எனினும் அந்த வழிகளில் மூலம் பணம் முழுமையாக செலவாகிறதே ஒழிய மன திருப்தி ஏற்படக்கூடிய அளவுக்கு முடி உதிர்வை தடுத்து நிறுத்தவில்லை என்று புலம்பும் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற எண்ணெயை உங்கள் வீட்டிலேயே செய்து குறைந்தது 48 நாட்கள் நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்.

 உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். உங்கள் முடி உதிர்வு கட்டுப்பாடோடு இருப்பது மட்டுமல்லாமல் புதிய முடிகள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரித்திருக்கும். அப்படிப்பட்ட முடி உதிர்வை தடுக்கக்கூடிய எண்ணெயை எப்படி செய்வது என்று எப்போது பார்க்கலாம்.

 முடி உதிர்வை தடுக்கக்கூடிய எண்ணெயை செய்ய தேவையான பொருட்கள்

1.வெந்தயம் 50 கிராம்

2.எள்ளு 50 கிராம்

--Advertisement--

3.கருஞ்சீரகம் 25 கிராம்

4.செம்பருத்தி 25 கிராம்

5.கருவேப்பிலை 25 கிராம்

6.மலை நெல்லிக்காய் ஒன்று

7.மருதாணி இலை 25 கிராம்

8.தேங்காய் எண்ணெய் கால் லிட்டர்

9.50 மில்லி கொட்டை எண்ணெய்

 செய்முறை

 முதலில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் தேங்காய் எண்ணெய் மற்றும் கொட்டை எண்ணையைத் தவிர மற்ற பொருட்களை இளம் வெயிலில் ஒரு வாரம் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் இந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மைய பொடித்துக் கொள்ளுங்கள். பிறகு இரும்பு வாணலியில் கால் லிட்டர் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி அடுப்பில் மிதமான பிளேனில் வைக்கவும்.

 இதனை அடுத்து எண்ணெய் லேசாக சூடேறியவுடன் நீங்கள் பொடித்து வைத்திருக்கும் அந்தக் கலவையை எண்ணெயில் கொட்டி நன்கு கிளறி விடுங்கள்.

 இதனை அடுத்து அடுப்பை ஆப் செய்து விட்டு கொட்டை எண்ணையை இதில் ஊற்றி கலந்து விடுங்கள். இப்போது இந்த கலவை சூடு ஆறும் வரை ஆறவிடுங்கள்.

 இந்த கலவை சூடு ஆறியவுடன் ஒரு வெள்ளைத் துணியை விரித்து எண்ணெயை வடித்து எடுத்து விடவும். வறுத்து எடுத்த எண்ணையை ஒரு குப்பியில் அடைத்துக் கொண்டு தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் வேர் கால்களில் நன்கு ஊடுருவி செல்லும் வண்ணம் தேய்த்து மசால் செய்ய வேண்டும்.

 இவ்வாறு தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் முடி உதிர்தல் பிரச்சனையில்  இருந்து நீங்கள் விடுதலை அடைவதோடு முடி வளர்ச்சியும் மிக நன்றாக இருக்கும்.

 மேலும் இந்த எண்ணெய் உங்களுக்கு குளிர்ச்சியை அளிப்பதால் இந்த சம்மர் நேரத்தில் நீங்கள் இதுபோன்ற எண்ணையை உங்கள் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தும் போது உங்கள் முடி வறண்டு விடுதல், வெடித்து பிளவுபடுதல் போன்றவை நடக்காது.

Continue Reading
 

More in

Trending Now

To Top