Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

எதிர்நீச்சல் நாயகி ஹரிப்பிரியாவுக்கு, நிஜ வாழ்விலும் எதிர்நீச்சல் தான்

சினிமா நடிகர், நடிகைகளை போலவே, சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் மிக பிரபலமாகி விடுகின்றனர். டிவி சேனல்களில், பெண்களில் பலரும் சினிமா மற்றும் செய்திகளை பார்ப்பதை தவிர்த்துவிட்டு, சீரியல்களை தான் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

பெரும்பாலும், இது குடும்ப கதைகளாக, உறவுகளுக்குள் ஏற்படும் பிணக்குகளை மையப்படுத்தி, அடுத்தடுத்த திருப்பங்களை கொண்டதாக இருப்பதால், சீரியல்களை சினிமாவை விட ஆர்வமாக ரசிக்கின்றனர்.

அந்த வகையில், எதிர்நீச்சல் நாயகி ஹரிப்பிரியா, சீரியல் ரசிகர்களின்
மனம் கவர்ந்த நாயகியாக இருக்கிறார். பிரியமானவள் தொடர் இவருக்கு, நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.

ஹரிப்பிரியா, நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்கிறார். ரசிகர்கள் விரும்பும் பாடல்களை கவிதையாக வர்ணித்து, பாடல்களை தருகிறார். இவர், சிறந்த நடனக்கலைஞர். யோகா பயிற்சியும் தருகிறார்.

கடந்த 2012ல், சீரியல் நடிகர் விக்னேஷ்குமாரை, காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன் உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, விவாகரத்து செய்துகொண்டனர். இப்போது, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

--Advertisement--

முன்பெல்லாம், சினிமா நடிகர்- நடிகையர் மண வாழ்க்கை பிரச்னை ஏற்பட்டு பிரிந்து விட்டால், அது நாளிதழ்களில் செய்தியாக வெளியாகி, மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும். இப்போது சீரியல் நடிகர்களின் விவகாரத்து விவகாரங்கள் கூட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி பரபரப்பாகி விடுகிறது.

அந்த வகையில், ஹரிப்பிரியா விவாகரத்து, தற்போது வைரலாகி வருகிறது.
ஆனால், எதிர்நீச்சல் நாயகி நந்தினி, நிஜ வாழ்விலும் கணவரை பிரிந்து வாழும் எதிர்நீச்சல் வாழ்க்கையை ஹரிப்பிரியா எதிர்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 

More in

Trending Now

To Top