“பெண்களுக்கே மோகம் வரும் பேரழகு..” – இளசுகளை அலற விடும் லவ் டுடே இவானா..!

இவானா,(Ivana) ஒரே படத்தில் ரசிகர்களின் மனம் தொட்ட நடிகை . லவ்டுடே இவானா என்றால், சட்டென முகம் மனதில் தோன்றிவிடும். கடந்தாண்டில் வெளிவந்த இப்படம், மாஸ் ஹிட் அடித்தது. படம் பார்த்தவர்கள், படம் குறித்து பாராட்டிய விமர்சனமே, அடுத்தடுத்த தியேட்டர்களில் ரசிகர்கள் படையெடுக்க காரணமாக அமைந்தது.

200 கோடி ரூபாய் வரை வசூல் குவித்தது. இந்த படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கராஜன்தான் படத்தின் ஹீரோ. இவர், ஏற்கனவே ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து கோமாளி என்ற படத்தை இயக்கினார். ஆனால், பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், இந்த படம் மெஹா ஹிட் படமாக அமைந்தது.

ivana

லவ்டுடே என 25 ஆண்டுகளுக்கு முன்பே, விஜய் – சுவலட்சுமி நடிப்பில், இயக்குநர் பாலசேகரன் இயக்கத்தில் ஒரு படம் வெளிவந்து வெற்றியடைந்தது. அதே பெயரில், பல ஆண்டுகளுக்கு பின் வந்த இந்த படமும் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் தவிர்க்க முடியாத ஒன்றாக, வாழ்வின் அம்சமாக மாறிவிட்டது. அதேவேளையில், பலரது தவறான நட்புக்கும் அதுதான் மிக உதவும் கருவியாக உள்ளது.

ivana

அதாவது, காதலர்களுக்குள் இருக்கும் உண்மையான காதலை, அன்பை பரிசோதிக்க மொபைல்போன்களை இருவரும் பரிமாறிக்கொண்டு, அதன் மூலம் அவர்களது உண்மை முகங்களை வெளிச்சப்படுத்தும் கதை தான் இது. இந்த கருத்தை மையப்படுத்தி, அந்த காட்சியமைப்பை மிக சிறப்பாக வடிவமைத்திருந்தார் பிரதீப் ரங்கராஜன்.

ivana

இதில் அவரது நடிப்பு மட்டுமின்றி, இவானா நடிப்பு வேறு லெவலில் இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ளும் சமயங்களில், குறிப்பாக மாமாகுட்டி விவகாரம் தெரிந்த பின்பு, இவானா நடிப்பும், சண்டையும் படத்தை விறுவிறுப்பாக்கியது. காதலி, தன்னை ஏமாற்றுகிறாள் என தெரிந்துகொள்ளும் காட்சிகளில் பிரதீப்பின் கோபமும், வெறுப்பும், ஆத்திரமும், ஆதங்கமும் பிரமாதமாக அவரது நடிப்பை வெளிப்படுத்தியது. எனவே, இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.
இவானா வின் இயற்பெயர் அலீனா ஷாஜி. சினிமாவுக்காக இவானா என மாறிவிட்டார். இவானா தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து வருகிறார்.

--Advertisement--

ivana

இவானா வின் சொந்த ஊர், கேரளா மாநிலம் எர்ணாகுளம், ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர். இவானா, இளங்கலை வணிகவியல் படித்திருக்கிறார்.மாஸ்டர்ஸ் என்ற மலையாள படத்தில்தான், இவானா அறிமுகம் ஆனார். இந்த படத்தில், குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்திருந்தார். ஹீரோ, ராணி பத்மினி, கள்வன், லெட்ஸ் கெட் மேரேஜ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ivana

இயக்குநர் பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில், இவானா நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் ஜோடியாக, இந்த படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக, வீட்டு வேலை செய்யும் பெண் கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால், அவரா இவர் என பலரும் ஆச்சரியப்படும் அளவுக்கு, லவ் டுடே படத்தில் கெட்டப்பிலும், கேரக்டரிலும் வேற லெவலில் இவானா நடிப்பு இருந்தது.

ivana

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவானா வின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள், இப்போது வைரலாகி வருகின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.