ப்பா.. என்னா பொண்ணு டா..! – வயசு பசங்களை வாட்டி வதைக்கும் ஜனனி ஐயர்..!

ஜனனி ஐயர் ( Janani Aiyer )தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அவை, வைரலாகி வருகின்றன.முன்னறிவான், பஹிரா, கருங்காப்பியம், வேழம், கூர்மன், தர்மபிரபு, அதே கண்கள், தெகிடி, அவன் இவன், விண்ணைத்தாண்டி வருவாயா, திருதிரு துறுதுறு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர்.இதில் அவன் இவன் படமும், தெகிடி படமும் ஜனனிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

Janani Aiyer,

மற்ற படங்களில் இவர் சிறப்பாக நடித்திருந்தாலும், அந்த படங்கள் சரியான வெற்றியை பெறவில்லை. ஆனால், அவன் இவன் படம் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுத் தந்தது.

போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்திருந்த இவர், இந்த படத்தில் ஆறடி உயரமுள்ள விஷாலை அதட்டுவதும், மிரட்டுவதும் என நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், பாலா இயக்கத்தில் நடித்ததால், இந்த படம், ஜனனிக்கு நல்ல இமேஜை பெற்றுத் தந்தது.

Janani Aiyer,

மேலும் இவர், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற வகையில், இன்னும் பலதரப்பு மக்களிடத்திலும் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

--Advertisement--

சென்னையில் பிறந்த இவர், படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட ஜனனி, 150க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். சிறு வயதில் இருந்தே, சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற பிறகு, பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராதது, ஜனனிக்கு ஏமாற்றம் அளித்தாலும், அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருக்கிறார்.

Janani Aiyer,

விளம்பர படங்கள் என்பது, பல பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு, சினிமா துறையில் நுழைவதற்கு ஒரு விசிட்டிங் கார்டாக, அமைந்துவிடுகிறது. அவர்களுக்கு ஒரு கூடுதல் சலுகையாக இருக்கிறது.சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகைகளில் ஜனனியும் ஒருவர்.

அடிக்கடி, தனது லேட்டஸ்ட் படங்களை அவர் அப்டேட் செய்கிறார். அதற்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிகிறது.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், நட்சத்திர ஓட்டல் ஒன்றில், தனது நண்பர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை ஜனனி கொண்டாடினார்.

Janani Aiyer,

அந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது. இப்போது மீண்டும் தனது புகைப்படங்களை அவர் அப்டேட் செய்திருக்கிறார். சிவப்பு நிற புடவையில் அப்சரஸ் போன்ற தோற்றத்தில் தனது படங்களை பதிவேற்றம் செய்து, ரசிகர்களின் கமெண்ட் மழையில் நனைந்து வருகிறார் ஜனனி.

மாடர்ன் டிரஸ்சிலும் அழகாக இருக்கிறார். மங்களகரமாக சேலையிலும் ஜனனி அசத்துகிறார் என, ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.