ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வேட்டையாடு விளையாடு கமலினி முகர்ஜி..!

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வேட்டையாடு விளையாடு கமலினி முகர்ஜி..!

மனிதர்களின் தோற்றம் என்பது, எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கப் போவது இல்லை. வயதும், கால மாற்றங்களும் மனிதர்களின் தோற்றத்தை மாற்றி விடுகின்றன.

ஆனால் ஒரு சிலர் மட்டும் உணவு கட்டுப்பாடு, நேர்த்தியான வாழ்க்கை என தங்களது தோற்றத்தை ஓரளவுக்கு ஒரே மாதிரியாக மெயின்டெயின்ட் செய்து வருகின்றனர்.

உடல் தோற்றத்தில்

அதுவும் தனது தோற்றத்தையே மூலதனமாக கொண்டவர்கள். அதில் மிகுந்த கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் , விஜய் போன்றவர்கள் எப்போதும் ஒரே மாதிரியான உடல் தோற்றத்தில் காணப்படுகின்றனர். இதற்கு காரணம். அவர்களது உடல் தோற்றம் குறித்த கூடுதல் விழிப்புணர்வுதான்.

அதனால்தான் 73 வயதிலும், ரஜினி வேட்டையன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 69 வயதில் கமல் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால் நடிகர்களை போல, நடிகைகள் அப்படி தங்களது உடல் தோற்றத்தை இளமையாக மெயின்டெயின்ட் பண்ணுவது மிகவும் சிரமம்.

நதியா, ரம்யா கிருஷ்ணன்

அந்த வகையில் நதியா, ரம்யாகிருஷ்ணன் போன்ற நடிகைகள் 50 வயதுகளை கடந்து அழகாக இருந்தாலும், முகத்தில் அந்த முதுமையின் சுருக்கங்களும், மாற்றங்களும் இன்னும் இருக்கவே செய்கின்றன.

நயன்தாரா தன்னுடைய தோற்றப் பொலிவும், உடல் அழகும் குறையவோ, மாறவோ கூடாது என்பதால்தான், வாடகைத்தாய் மூலம் இரட்டை பிள்ளைகளுக்கு தாயானார்.

இதையும் படியுங்கள்: என்னுடைய இந்த உறுப்பை ரசிகர்கள் என்ஜாய் பண்றாங்க… கூலாக கூறிய விக்ரம் வேதா ஹீரோயின்..!

ஆனால் ஐயா, சந்திரமுகி படத்தில் நடித்த நயன்தாரா போல, அவர் இப்போது இல்லை என்பதுதான் நிதர்சனம். 40 வயதுக்குரிய ஒரு தோற்றம்தான் நயன்தாராவின் அழகில் இருக்கிறது.

கமலினி முகர்ஜி

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்தனர். இதில் பிளாஷ்பேக்கில் கமல் மனைவியாக நடித்தவர் கமலினி முகர்ஜி.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

அந்த படத்தில் பார்த்தவுடன் பச்சக் என மனதில் ஒட்டிக்கொள்ளும் அப்படி ஒரு அம்சமான அழகில் காணப்படுவார். அடுத்து இறைவி படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கும், புலிமுருகன் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

பல ஆண்டுகளாக

அதன்பிறகு பல ஆண்டுகளாக கமலினி முகர்ஜி நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமலினி முகர்ஜியின் புகைப்படங்கள் இப்போது வெளிவந்துள்ளன.

அடையாளமே தெரியலை

அதை பார்த்த ரசிகர்கள், வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த கமலினி முகர்ஜியா இது, என்னது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாரே, முகமே அடையாளம் தெரியாத மாதிரி இருக்கிறாரே, என புலம்பி வருகின்றனர்.