“பத்தே நிமிஷம் சூப்பரான சைடு டிஷ் ..!” – காரைக்குடி முள்ளங்கி மசாலா..!!

நிறைய வீட்டுகளில் முள்ளங்கியை இந்த மாதிரி ஒரு சைடிஷ் ஆக பயன்படுத்தி இருப்பார்களா? என்பது தெரியாது. முள்ளங்கியை சாம்பாராக மட்டும் வைத்து சாப்பிட்டவர்கள் இனி உங்களுக்கு சப்பாத்திக்கு சைடுடிஷ் ஆக புதுமையான வகையில் இந்த காரைக்குடி முள்ளங்கி மசாலாவை செய்து அசத்தலாம்.

முள்ளங்கி மசாலா சப்பாத்திக்கு மட்டுமல்ல நீங்கள் வைக்கும் வெஜிடபிள் புலாவ், வெஜிடபிள் ரைஸ் மற்றும் நார்மல் வைட் ரைஸ் உடன் இணைத்து சாப்பிடும் போது சுவை கூடுதலாக இருக்கும்.

காரைக்குடி முள்ளங்கி மசாலா செய்ய தேவையான பொருட்கள்

1.முள்ளங்கி ஒன்று வட்டமாக வெட்டியது

2.எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

3.பச்சை மிளகாய் இரண்டு

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

4.எண்ணெய்ஒரு டேபிள் ஸ்பூன்

5.சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்

6.மல்லி இரண்டு டேபிள் ஸ்பூன்

7.வரமிளகாய் இரண்டு

8.பூண்டு நான்கு பல்

9.பெரிய வெங்காயம் ஒன்று

10.தக்காளி இரண்டு

11.உப்பு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வறுத்து அரைக்க தேவையான பொருட்களான சோம்பு, மல்லி இவற்றை இளம் சூட்டில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

 பொன் நிறமாக இது வறுபடும் சமயத்தில் நீங்கள் அதில் வர மிளகாய் போட்டு நன்கு வதக்குங்கள். இதனை அடுத்து இதில் பூண்டு, வெங்காயம், தக்காளி ஒவ்வொன்றையும் நன்கு நறுக்கி தேவையான அளவு உப்பினை போட்டு அவற்றோடு இணைத்து வதக்கி விடவும்.

 மேலும் இதனை அப்படியே வேறொரு பௌலில் மாற்றி விடுங்கள். சூடு அறிய பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து விடுங்கள். அரைத்த இந்த கலவையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதனை அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து அதில் முள்ளங்கி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். அதன் பிறகு தேவையான நீர் ஊற்றி உப்பையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

 இது கொதித்து வரும் நிலையில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து முள்ளங்கி வேகம் வரை கொதிக்க விட்டு இறக்கினால் காரைக்குடி முள்ளங்கி மசாலா தயார்.

   

--Advertisement--