20 ஆண்டுகால போராட்டம்.. நிம்மதி பெருமூச்சு விடும் கவுண்டமணி..!

20 ஆண்டுகால போராட்டம்.. நிம்மதி பெருமூச்சு விடும் கவுண்டமணி..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் கவுண்டமணி. கடந்த சில ஆண்டுகளாக முதுமை காரணமாக, அவர் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார்.

கவுண்டமணி

எனினும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை, 49 ஓ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் யோகிபாபுவும் கவுண்டமணியும் இணைந்து நடித்துள்ளனர்.

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில்

கவுண்டமணி, கடந்த 1996ம் ஆண்டில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், நளினி பாய் என்பவரிடம் இருந்து 22 ஆயிரத்து 700 சதுர அடி நிலத்தை வாங்கியிருந்தார். அதாவது 5 கிரவுண்ட், 454 சதுர அடி நிலத்தை வாங்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்: “நம்ம மைண்டு அங்க போகுதே…” நைட் பார்ட்டியில் அனசுயா பரத்வாஜ் விவகாரமான போஸ்..!

--Advertisement--

அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக ஸ்ரீ அபிராமி பவுண்டசன் என்ற கட்டுமான நிறுவனத்திடம், அந்த நிலத்தை கவுண்டமணி ஒப்படைத்தார். 15 மாதங்களில், அந்த வணி வளாகத்தை அந்த கட்டுமான நிறுவனம் கட்டித் தரவும், கட்டுமான பணிகளுக்காக கவுண்டமணி 3.58 கோடி தருவதாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பணி துவங்கவில்லை

இந்நிலையிகல் கடந்த 1996 முதல் 1999 வரை கட்டுமான நிறுவனத்துக்கு கவுண்டமணி தரப்பில் இருந்து ரூ. 1.04 கோடி ரூபாய், வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கட்டுமான நிறுவனம் 2003ம் ஆண்டு வரை, கவுண்டமணிக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணியை துவக்கவே இல்லை.

கோர்ட்டில் வழக்கு

இதையடுத்து, அந்த கட்டுமான நிறுவனத்தின் மீது நடிகர் கவுண்டமணி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் 46.51 லட்சம் ரூபாய்க்கு அந்த இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து முடிந்துள்ளதாக கட்டுமான நிறுவனம் சார்பில், கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கவுண்டமணிக்கு சொந்தமான இடத்தை அவருக்கு திருப்பி தர உத்தரவிட்ட நீதிமன்றம், அந்த நிலத்தை திருப்பி ஒப்படைக்கும் வரை கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கவுண்மணி, அவரது மனைவி சாந்தி, மகள்கள் செல்வி, சுமித்ரா ஆகியோருக்கு மாதந்தோறும் தலா ஒரு லட்சம் ரூபாய், அந்த கட்டுமான நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: சந்திரபாபு, ஜெமினி கணேசன் மோதல்.. இப்படியெல்லாமா நடந்திருக்கு.. இதனால் தான் மார்கெட் இழந்தாரா..?

மேல் முறையீடு

இதையடுத்து அந்த ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் கட்டுமான நிறுவனம், 2019ம் ஆண்டில் தனிநீதிபதி வழங்கிய இந்த உத்தரவு குறித்து, மேல்முறையீடு செய்தது.

அந்த மேல் முறையீட்டு மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 20 ஆண்டு காலமாக, தனியாரிடம் சிக்கியிருந்த நிலத்தை மீட்க, சட்ட போராட்டம் நடத்தி, கவுண்டமணி வெற்றி பெற்றிருக்கிறார்.

20 ஆண்டுகால போராட்டம்

தனக்கு சொந்தமான இடம், தனியார் கட்டுமான நிறுவனத்திடம் சிக்கிக் கொண்ட நிலையில், 20 ஆண்டுகால போராட்டம் நடத்தி அதை மீட்ட நிலையில், நிம்மதி பெருமூச்சு விடுகிறார் கவுண்டமணி.