கிருத்திகா உதயநிதி யாருன்னு தெரியுமா..? பலரும் அறிந்திடாத ரகசியம்..

கிருத்திகா உதயநிதி யாருன்னு தெரியுமா..? பலரும் அறிந்திடாத ரகசியம்..

தமிழகத்தை பொறுத்த வரை பல பெண்கள் பிரபலங்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் கிருத்திகா உதயநிதி இன்று பன்முக திறமையை கொண்டிருக்கும் பெண்ணாக விளங்குகிறார்.

இதையும் படிங்க: புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


இவர் தன்னோடு இணைந்து கல்லூரியில் படித்த உதயநிதியை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்கிறார்.

கிருத்திகா உதயநிதி..

மேலும் திரைப்படங்களை இயக்குவதோடு நின்றுவிடாமல் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இயற்கை ஆவலர், சமூக சேவையிலும் அதிகளவு ஆர்வம் காட்டி வரும் கிருத்திகா உதயநிதி மரக்கன்றுகள் பலவற்றை நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இவர் 1978-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி பிறந்தவர். பள்ளி படிப்பை சென்னையில் முடித்த இவர் லயோலா கல்லூரியில் பட்டப் படிப்பை படித்தார்.


விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம் பெற்ற இவர் விளம்பரத் துறையில் தடம் பதித்து மிக நேர்த்தியான முறையில் தனது திறமைகளை வெளிப்படுத்து இருந்தார். மேலும் தன்னுடைய தோழிகளோடு இணைந்து இன்பாக்ஸ் 1305 எனும் பத்திரிக்கையை நிறுவி நடத்தினார்.

மேலும் உயிர், உறவு, உண்மை போன்ற குறும்படங்களை எடுத்து வெளியிட்ட இவர் லைப் என்ற குறும்படம் ஜெய்ப்பூரில் நடந்த குறும்பட திருவிழாவில் இவருக்கு சர்வதேச விருதினை பெற்று தந்தது.

கிருத்திகா உதயநிதியின் மறுபக்கம்..

மேலும் இவர் திருநங்கைகளுக்கு ஆதரவாக ஆல்பம் ஒன்றை வெளியிட்டார், இந்த ஆல்பத்தில் சதையை மீறி இதயம் பார்க்கும் மனிதம் எங்கும் இல்லையா? மனதை கீறி திருத்த பார்க்கும் இது பிழையின் பிள்ளையா? என்ற பாடல் வரிகள் அனைவரது நெஞ்சையும் கவரக்கூடிய வகையில் இருந்தது.


மேலும் “ஸ்டேன்டு பை மீ என்ற லோகோவோடு கடந்த ஆண்டு வெளி வந்த இந்த ஆல்பம் திருநங்கைகளின் வலிகளை மிகச் சிறப்பான முறையில் வெளிப்படுத்திய வகையில் இருந்தது. மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

லயோலாவில் படித்த இவர் உதயநிதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர் திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். அந்த வகையில் வணக்கம் சென்னை, காளி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். அத்தோடு 2022-ஆம் ஆண்டு பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரையும் இயக்கியவர்.

இது வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கக்கூடிய இவர் சமூக ஆர்வலராக திகழ்வது பலருக்கும் நன்மை அளித்துள்ளது. மேலும் இவர் மேக்கப் போடாமல் இயல்பாக இருப்பது சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்படும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது என பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.


இதையும் படிங்க: டி ராஜேந்தர் பற்றி பலரும் அறியாத உண்மைகள்… தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..! 

தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி கிருத்திகா உதயநிதியின் வாழ்க்கை வரலாறு பற்றி அவர்களுக்குள் பேசி வருவதோடு நண்பர்களுக்கும் ஷேர் செய்து இந்த விஷயத்தை பகிர்ந்து வருகிறார்கள்.