இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் - பலரும் அறியாத தகவல்..!

இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் – பலரும் அறியாத தகவல்..!

சினிமாவில் நடித்துதான் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று இல்லை. இப்போதெல்லாம் ஒரு பாடல் காட்சி மூலமாகவே மக்கள் மத்தியில் மிக பிரபலமாகி விட முடியும் என்பதற்கு சரியான அடையாளம் கிஷென்தாஸ். முதல் நீ முடிவும் நீ என்ற பாடலை ஒருமுறை பார்த்தாலே, மீண்டும் மீண்டும் அந்த விஷூவல் காட்சிகளை பார்க்க தோன்றும்.

கிஷென் தாஸ்

மைக் முன்னால் நின்றபடி அவர் பாடும் அந்த காட்சிகள், மனதில் பல நினைவலைகளை ஏற்படுத்தும். அதில் பல காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளும் வந்து போகும். அப்படி அந்த ஒரு பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து, இன்று மிக பிரபலமாகி இருப்பவர்தான் கிஷென் தாஸ்.

நடிகர், தொகுப்பாளர், மாடல், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர் என பல அடையாளங்களை கொண்டவராக கிஷென் தாஸ் இருக்கிறார்.

இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் - பலரும் அறியாத தகவல்..!

முதல் நீ முடிவும் நீ… பாடல்

முதல் நீ, முடிவும் நீ என்ற பாடல் காட்சியில் இசையின் மீதான காதலையும், படிப்பு மீது இருக்கிற வெறுப்பையும், வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் கடந்து செல்லும் சிறுவனாக வினோத் என்ற கதாபாத்திரத்தில் கிஷென் தாஸ் நடிப்பு வேற லெவலாக இருந்தது.

--Advertisement--

ரேகா மீதான காதலை, அந்த பாடலின் வழியே மென்மையான உணர்வுகளால் அவர் வெளிப்படுத்தி இருந்த விதம் மிக அற்புதமாக காட்சி வடிவில் ரசிகர்களை குளிர்வித்தது. இந்த பாடல்ங காட்சியில் நடித்த நாயகிதான், குட்நைட் படத்தில் மணிகண்டன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் - பலரும் அறியாத தகவல்..!

கிஷென் தாஸ், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து முதல் நீ, முடிவும் நீ என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமானார்.

ஒத்திசை, சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களில் இப்போது நடித்து வருகிறார்.
இவர் ஆனந்தம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபல சீரியல் நடிகை பிருந்தா தாஸின் மகன் ஆவார்.

இதையும் படியுங்கள்: காய்த்து தொங்குது பச்ச மாங்கா.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. கையில் தாங்கியபடி சீரியல் நடிகை பிரவீனா..

மக்கள் மத்தியில்

கிஷென் தாஸ் மிக பிரபலமான யூ டியூபர். ஜீ 5ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் முதல் நீ, முடிவும் நீ என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

கிஷன் நெட்பிக்ஸில் மெனு ப்ளீஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதில் அனில் கபூர், ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, நீரஜ் மாதவ், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் இவரது சிறப்பு விருந்தினர்களாக உள்ளனர்.

இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் - பலரும் அறியாத தகவல்..!

கூத்துப்பட்டறை

கிஷென் தாஸ் சென்னையில் பிறந்தவர். இவரது அம்மா பிருந்தா தாஸ், நாடக நடிகை. கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற கிஷென்தாஸ் சென்னை லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் படித்திருக்கிறார். தொடர்ந்து இப்போது நடிப்புத் துறையில் தனக்கான இடத்தை அடைய முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

பிருந்தா தாஸ் மகன்

முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் – பலரும் அறியாத புதிய தகவலாக அவர், ஆனந்தம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்த நடிகை பிருந்தா தாஸ் மகன் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.

இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் - பலரும் அறியாத தகவல்..!