என் கணவர் இந்த காட்சியை பாத்துட்டு கொடுத்த ரியாக்ஷன் இது தான்.. லைலா குபீர்..!

என் கணவர் இந்த காட்சியை பாத்துட்டு கொடுத்த ரியாக்ஷன் இது தான்.. லைலா குபீர்..!

தமிழ் திரையுலகை பொருத்த வரை கள்ளழகர் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தான் லைலா. இவர் பெயரில் லைலா என்ற வார்த்தையை பார்த்ததும் இவரது ரசிகர்கள் அழகிய லைலா என்ற பாடலை பாட ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவு துருதுருவென அனைவரையும் கவரக்கூடிய தன்மையோடு இவர் இருந்தார்.

இதையும் படிங்க: இந்த நடிகர்கள் அதற்கு அழைத்தால் ஓகே சொல்லிடுவேன்… ஓப்பனாக சொன்ன திவ்யா துரைசாமி..


மேலும் குறும்புத்தனமான நடிப்பில் சொக்கிப் போயிருந்த ரசிகர்கள் இவர் நடிப்பில் வெளிவந்த தில், தீனா, மௌனம் பேசியதே போன்ற படங்களில் இவருக்கு பெருத்த ஆதரவை தந்ததோடு இவரது நடிப்பையும் போற்றினார்கள்.

நடிகை லைலா..

நடிகை லைலாவின் உண்மையான பெயர் குயின் மேரி என்பதாகும். கோவாவில் உள்ள ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த லைலா தமிழ் திரையுலகில் அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த் சரத்குமார், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அந்த காட்சிய பார்த்து என் கணவர் கொடுத்த ரியாக்ஷன்..

இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆன மொய்தீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதில்லை என்பதில் தெளிவாக இருந்த இவர் தற்போது மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.


இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை லைலாவிடம் இவர் நடித்த படங்களிலேயே இவர் கணவருக்கு பிடித்த படம் எது? அந்த படத்தில் அவர் ரசித்த காட்சி எது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இவர் மிகவும் சிறப்பான முறையில் பதில் அளித்து இருப்பது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்தது.

அந்த வகையில் பாலா இயக்கத்தில் வெளி வந்த திரைப்படமான பிதாமகன் திரைப்படம் தான் இவரது கணவருக்கு பிடித்த திரைப்படமாக கூறிய இவர் அந்த படத்தில் சூர்யாவோடு இணைந்து மண்ணில் கட்டிப்பிடித்து சண்டை போட்ட காட்சிகள் தான் அவருக்கு பிடித்த காட்சிகள் என்று ஒரு ரியாக்ஷன் கொடுத்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் சுட்டித்தனமாக நடித்திருந்த நடிப்பு எவராலும் மறக்க முடியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திரை உலகம் இருக்கும் வரை இவரது நடிப்பு இந்த படத்தில் பேசும் படியாக இருந்தது என்று பல்வேறு விமர்சனங்களை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.


இந்த ரியாக்சனை பார்த்து இவரது கணவர் எப்படி இவரை பற்றி நினைத்து இருப்பார் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டதோடு வேறு லெவலில் லைலாவின் ரியாக்ஷன் இருந்ததாக கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் இவரது துறுதுறுப்பாக நடிப்பிக்கும் நடனத்திற்கும் இன்று வரை போட்டியாக எவரும் வரவில்லை என்பதால் மீண்டும் இவர் நடிக்க ஆரம்பித்தால் ரசிகைகள் அனைவரும் அவர்களது ஒட்டுமொத்த ஆதரவை தருவார்கள்.

இந்நிலையில் லைலாவின் கணவருக்கு பிடித்த படம் பற்றியும் அவரது ரியாக்ஷன் பற்றியும் கூறப்பட்ட பேச்சானது இணையத்தில் வைரலாக பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்ற வீடியோவாக உள்ளது என கூறலாம்.


இதையும் படிங்க: விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கை ரகசியம்..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் லைலா நடித்த படத்தில் அவர் கணவருக்கு பிடித்த படம் பிதாமகன் படம் தானா.. எங்களுக்கும் அந்த படம் தான் பிடிக்கும் என்று தொடர்ந்து பல்வேறு வகையான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.