Connect with us

“கொழுப்பை குறைக்கும் கொள்ளு தொக்கு..! ” – பாரம்பரிய முறையில் செய்யுங்க..!!

Kollu Thokku, Kollu Thokku making ingredients, Kollu Thokku making method, கொள்ளு தொக்கு, கொள்ளு தொக்கு செய்முறை, கொள்ளு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

Food Recipes | சமையல் குறிப்புகள்

“கொழுப்பை குறைக்கும் கொள்ளு தொக்கு..! ” – பாரம்பரிய முறையில் செய்யுங்க..!!

துவரம் பருப்பு விட்டால் வேறு பருப்பு  இல்லை என்று சொல்லும் அளவுக்கு தினமும்  துவரம் பருப்பின் ஆதிக்கம் சமையலறையில் அதிகரித்து விட்டது. அன்றேல்லாம் நமது முன்னோர்கள் சனிக்கிழமை என்றால் கொள்ளு, புதன்கிழமை பாசிப்பயிறு, திங்கட்கிழமை தட்டைப்பயிறு என வெவ்வேறு பருப்புகளை தங்கள் உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.

Kollu Thokku, Kollu Thokku making ingredients, Kollu Thokku making method, கொள்ளு தொக்கு, கொள்ளு தொக்கு செய்முறை, கொள்ளு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

அந்த வகையில் இன்று சனிக்கிழமைகளில் செய்து சாப்பிடக்கூடிய கொள்ளு தொக்கினை எப்படி பாரம்பரிய முறையில் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

கொள்ளு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

1.கொள்ளு பருப்பு 1/4 கிலோ

2.சின்ன வெங்காயம் 50 கிராம்

இதையும் படிங்க :  "மணக்க மணக்க மொச்சைக்கொட்டை குழம்பு..!" - விரும்பிய படி சாப்பிட இப்படி செய்யுங்க..!

3.பச்சை மிளகாய் ஐந்து

4.சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன்

5.பூண்டு நான்கு பல்

6.கருவேப்பிலை ஒரு கொத்து

Kollu Thokku, Kollu Thokku making ingredients, Kollu Thokku making method, கொள்ளு தொக்கு, கொள்ளு தொக்கு செய்முறை, கொள்ளு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

செய்முறை

கொள்ளினை கல் நீக்கி சுத்தம் செய்து போட்டு முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை எழுந்தவுடன் இதை குக்கரில் போட்டு பத்து விசிலில் இருந்து 15 விசில் வரை விட்டு விடவும். இதனை அடுத்து இந்த கொள்ளு பருப்பினை நீங்கள் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டாம்.

 உங்கள் வீட்டில் ஆட்டுக்கல் அல்லது இடி கல் இருந்தால் அந்த இடி கல்லில் இந்த கொள்ளு பருப்பு, சீரகம், பச்சையாக வைத்திருக்கும் சின்ன வெங்காயம், கருவேப்பிலை, இரண்டு பல் பூண்டு இவற்றை போட்டு ஒன்று இரண்டாக அப்படியே இடித்து எடுத்தால் ஆரோக்கியத்தை தரும் கொள்ளு தொக்கு தயார்.

இதையும் படிங்க :  " வீட்டிலேயே பன்னீர் பட்டர் மசாலா..!" - பிள்ளைகள் விரும்பி சாப்பிட எப்படி செய்யுங்க..!!

Kollu Thokku, Kollu Thokku making ingredients, Kollu Thokku making method, கொள்ளு தொக்கு, கொள்ளு தொக்கு செய்முறை, கொள்ளு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

 இதை சுடச்சுட சாதத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு சாப்பிடும் போது படு சுவையாக இருக்கும்.

இந்த முறையை நீங்களும் உங்கள் வீட்டில் கையாண்டு இதுபோல கொள்ளு தொக்கையை செய்து உண்பதின் மூலம் உங்கள் உடலில்  இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதோடு உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் கொடுக்கும்.

அது மட்டுமல்லாமல் சளி வரட்டு இருமல் போன்றவற்றிற்கு ஒரு மிகச்சிறந்த நிவாரணியாகும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top