“அற்புதங்கள் புரியும் மணல் மாதா ஆலயம்..!” – ஓர் அலசல்..!

மணல் மாதா ஆலயம்: வேளாங்கண்ணி மாதாவை போலவே இந்த மணல் மாதா ஆலயமும் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாக விளங்குகிறது. இந்த ஆலயமானது தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் சொக்கன் குடியிருப்பில் அமைந்துள்ளது.

Manal matha shrine

இத்திருத்தலமானது வரலாற்று சிறப்புமிக்க தளமாக கிறிஸ்துவர்களுக்கு விளங்குகிறது. மேலும் இது கிபி முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்த போது தமிழகத்தின் தென் பகுதியில் கிறிஸ்துவ சபைகளை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் வீரநாடு என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இந்த பகுதியை ஆண்ட மன்னனின் மனைவி மகளை தீய ஆவிகளின் பிடியில் இருந்து விடுவித்த புனித தோமையார் கிறிஸ்துவ ஒளியை அங்கு பரப்பினார்.

Manal matha shrine

மேலும் 1339இல் போப் ஆண்டவரின் தூதுவராக வந்தவர் இந்திய கிறிஸ்தவர்களை சந்தித்தபோது இந்த மாதாவின் சொரூபத்தை வடிவமைத்ததாக கூறுகிறார்கள்.இந்த மாதாவின் ஸ்வரூபம் சந்தனமரம் மற்றும் யானை தந்தம் இணைந்து செய்யப்பட்டு உள்ளது.

திடீர் என்று ஏற்பட்ட காலநிலை மாறுபாடு காரணமாக இந்த கோயிலானது மணலில் புதைந்து விட்டது. இதனை அடுத்து ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இந்த பகுதியில் தன் காலில் பட்ட சிலுவையைப் பற்றி அங்கு உள்ள மக்களிடம் கூறியதை அடுத்து மக்கள் அந்த பகுதியில் சென்று பார்த்த போது மணலுக்கு அடியில் இந்த மாதா கோயில் அமைந்திருந்தது.

Manal matha shrine

எனவே தான் அந்த மாதாவை நாம் மணல் மாதா ஆலயம் என்று கூறுகிறோம். மேலும் பக்தர்களுக்கு பலவிதமான நன்மைகளைச் செய்யும் மாதாவாக விளங்குகிறார். இன்று என் தமிழக அரசின் மூலம் இந்த இடம் சுற்றுலா தளமாக மாற்றப்பட்டுள்ளது முடிந்தால் நீங்களும் ஒருமுறை எந்த ஆலயத்திற்கு சென்று அன்னையை தரிசித்து வாருங்கள் கட்டாயம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.