உடைஞ்சு போயிட்டேன்.. படையப்பா.. சொத்து எழுதி வைக்கும் காட்சி.. சிவாஜி சொன்ன வார்த்தை.. கே.எஸ்.ரவிகுமார்..!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளியான கே எஸ் ரவிக்குமார் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.

இவர் திரைப்பட இயக்குனராக பல்வேறு வெற்றி படங்களை இயக்கி மாபெரும் வெற்றிகளை குவித்து வணிக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த இயக்குனராக பார்க்கப்பட்டு வருகிறார்.

அது மட்டும் இன்றி தான் இயக்கும் படத்திலேயே ஒரு சில காட்சிகளில் தோன்றி நடித்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் கே எஸ் ரவிக்குமார்.

சிறந்த படைப்பாளி கே.எஸ்.ரவிகுமார்:

இவர் இயக்குனர் விரமானிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து அதன் கலைகளை கற்று தெரிந்து. அதன் பிறகு சேரனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி,

--Advertisement--

அவரிடம் சில ஆண்டுகள் திரை படம் இயக்கம் நுணுக்கங்களை கற்று தேர்ந்த பிறகே திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார்.

முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தனது திரைத்துறை வாழ்க்கையை துவங்கினார்.

தொடர்ந்து சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, நாட்டாமை, பெரிய குடும்பம், முத்து, அவ்வை சண்முகி, நட்புக்காக, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா,

பாட்டாளி, எதிரி, சரவணா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதனிடையே 2000 காலகட்டத்தில் வளர்ந்து வந்த நடிகர்களான சிலம்பரசன், அஜித் குமார், கமல்ஹாசன்,

சூர்யா என பல முன்னணி இளம் நடிகர்களை வைத்தும் படம் எடுத்திருக்கிறார். இதனுடைய தயாரிப்பாளராக தெனாலி படத்தின் மூலமாக அறிமுகமானார்.

வெற்றி மகுடம் சூட்டிய படங்கள்:

தொடர்ந்து சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். இதனிடையே நடிகராக அவர் தன்னுடைய பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்த புகழ் பெற்றிருக்கிறார்.

சமீபத்திய படங்கள் ஆன விண்ணைத்தாண்டி வருவாயா, தங்க மகன், என் ஆளோட செருப்பை காணோம், மாயவன், கோமாளி, நான் சிரித்தால், கோபுரா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில்

இவர் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் ரஜினிகாந்தை வைத்து படையப்பா படத்தை இயக்கும்போது போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும்,

ரஜினியுடன் உரையாடல் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் எமோஷ்னலாக பேசியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

படையப்பா படத்தில் சொத்து எழுதி வைக்கும் காட்சி:

அதாவது, படையப்பா படத்தில் இடம்பெற்ற சொத்து எழுதி வைக்கும் காட்சியின் போது அம்மா மகன் மகள் என அனைவரும் வந்து பத்திரத்தில் கையெழுத்து போடுவார்கள்.

அப்போது மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சித்தாரா கையெழுத்து போடும்போது மட்டும் சிவாஜி கண்ணீர் சிந்த வேண்டும் என்பது போன்ற காட்சியை அவரிடம் நான் எடுத்துக் கூறினேன்.

அப்போது அவர் என் மனைவி கையெழுத்து போட்டால் என் மகன் கையெழுத்து போட்டான் அப்போதெல்லாம் நான் கண்ணீர் விடவில்லை.

மகள் கையெழுத்து போடும்போது மட்டும் அழ வேண்டும் என்கிறீர்களே என்ன காரணம் என்று என்னிடம் கேட்டார்.

அம்மா மகன் இருவரும் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள். ஆனால், மகள் இன்னொரு இடத்துக்கு பிழைக்க போகக்கூடிய ஒரு பெண் அவளுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?

என்ற ஒரு அச்சத்தில் நீங்கள் கண்ணீர் விடுகிறீர்கள் என்று சிவாஜுக்கு நான் எடுத்து கூறினேன். அப்படியா.. இங்க எனக்கு செய்து காட்டு பார்க்கலாம் என்று கூறினார்.

சவால்விட்டு ஆடிப்போன ரஜினி:

நான் அந்த இடத்திலேயே அந்த காட்சியை நடித்துக் காட்டினேன். கிளிசரின் போடாமலேயே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.

இதை பார்த்து சிவாஜி மிரண்டு போனார். எப்படி உனக்கு கண்ணீர் வந்தது..? என்ன நினைத்துக் கொண்டு நடித்தாய்..? என கேட்டார்.

ஐயா நான் என்னுடைய மகளை நினைத்துக் கொண்டு நடித்தேன். ஒருவேளை என்னுடைய சொத்துக்கள் எல்லாம் இப்படி பறிபோய் விட்டால் என் மகளைப் பார்த்தால் எனக்கு என்ன உணர்வு ஏற்படுமோ?

அதை நினைத்தேன். அந்த இடத்திலேயே உடைந்து போய் விட்டேன். எனக்கு கண்ணீர் வந்துவிட்டது எனக் கூறினேன்.

அதன் பிறகு சிவாஜி அந்த கதையின் அந்த காட்சியின் ஆழத்தை புரிந்து கொண்டு அதை அழகாக நடித்து விட்டார்.

அந்த காட்சி நடித்த முடித்த பிறகு ரஜினியை பார்த்து இவன் டைரக்டர் மட்டுமல்ல மிகப்பெரிய நடிகன் என்று என என்னை பார்த்து கூறினார்.

ஐயா.. இது போதும் எனக்கு ஆயிரம் ஆஸ்கார் கிடைத்தது போல இருக்கிறது என கூறினேன் என பதிவு செய்திருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார்.