“இந்த ஸ்டைல்ல பொடிய செஞ்சு யூஸ் பண்ணுங்க..!” – மௌத் வாட்டரிங் இட்லி பொடி மச்சி..!!

இட்லிக்கு எவ்வளவு சட்னிகள் மற்றும் சாம்பாரை நாம் பயன்படுத்தினாலும் கடைசியாக கொஞ்சம் பொடியை போட்டு சாப்பிட்டால் தான்  ஒரு புல் பில்லான உணர்வு நமக்கு கிடைக்கும்.

 அந்த வகையில் பலவிதமான இட்லி பொடிகளை நாம் சுவைத்திருப்போம். குறிப்பாக எள்ளு  இட்லி பொடி, கொள்ளு இட்லி பொடி என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் இன்று நாகர்கோவிலில் செய்யக்கூடிய இட்லி பொடியை எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.

 நீங்கள் எந்த மாதிரி இட்லி பொடியை செய்து பொடி இட்லியாக சாப்பிட கொடுத்தால் இன்னும் இரண்டு இட்லி வேண்டும் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் அனைத்து இட்லிகளும் அடுத்த நிமிடமே காலியாகும் படி இதன் சுவை இருக்கும்.

நாகர்கோயில் இட்லி பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்

1.கடலைப்பருப்பு மூன்று டேபிள் ஸ்பூன்

2.எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

3.உளுத்தம் பருப்பு ஐந்து டேபிள் ஸ்பூன்

4.மல்லி மூன்று டேபிள் ஸ்பூன்

5.பூண்டு பத்து பல்

6.பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் 7.வரமிளகாய் எட்டு

8.கருவேப்பிலை சிறிதளவு

9.புளி எலுமிச்சம் பழ அளவு

10.துருவிய தேங்காய் ஒரு கப்

11.உப்பு போதுமான அளவு

செய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து அதில் கடலைப்பருப்பை போட்டு பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

 இதனை அடுத்து அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும் உளுந்து பருப்பை போட்டு நன்கு வறுத்து அதையும் கடலைப்பருப்பு போட்டு வைத்திருக்கும் தட்டத்தில் போட்டுக் கொள்ளவும்.

 இதனைக் அடுத்து மீண்டும் அதே வாணலியில் மல்லியை சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து கடலைப்பருப்பு வைத்திருக்கக்கூடிய அந்தத் தட்டத்தில் போட்டு விடுங்கள்.

 மீண்டும் அந்த வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு பற்களை நறுக்கிப்போட்டு பொன் நிறமாக வருத்து அதை தனியாக வைத்துக் கொள்ளவும்.

 அடுத்து வரமிளகாயை சேர்த்து வறுத்துக் கொண்டு சிறிதளவு கருவேப்பிலையும் அதை போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்.

 புளியை ஒரு நிமிடம் நசுக்கி விட்டு வதக்கி அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றி வாணலியில் துருவி வைத்திருக்கும் தேங்காய் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

 இறுதியாக இந்த அத்தனை பொருட்களையும் ஈரம் இல்லாத மிக்ஸர் ஜாரில் வைத்து சுவைக்கு ஏற்ப உப்பையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்தால் நாகர்கோயில் இட்லி பொடி தயார்.

 நீங்க இட்லி பொடியை நல்லெண்ணையோடு சேர்த்து நீங்கள் சாப்பிடும் போது பொடி இட்லி படு பிரமாதமாக இருக்கும்.

   

--Advertisement--