நடிகை நளினியை முதலில் காதலித்தது எந்த நடிகரை தெரியுமா..? – ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகை நளினி, ராமராஜனின் மனைவி என்பது பலருக்கும் தெரியும். ஆனால், 1980 – 90களில் இவர்தான் தமிழ் சினிமாவில் டாப் நடிகை. ஏனெனில் இளம் வயதில் நடிகை நளினி, படம் பார்க்கும் ரசிகர்களை பாடாய்படுத்தும் அளவுக்கு இளமை நாயகியாக ஜொலித்தார். பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

100வது நாள், 24 மணி நேரம். ஓசை, வீட்டுக்கு ஒரு கண்ணகி, பிள்ளை நிலா, எங்கள் குரல், யார், பாலைவன ரோஜாக்கள், கரிமேட்டு கருவாயன், ராசாத்தி ரோஜாக்கிளி என பல படங்களை சொல்லலாம். இதில் பெரும்பாலும் ஹீரோயின் கேரக்டரில்தான் நளினி நடித்தார்.

ஒரு காலகட்டத்துக்கு பிறகு, குண்டான உடல்வாகு காரணமாக அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்களில் மீண்டும் சினிமாவில் நளினி துவங்கினார். காதல் சடுகுடு, ஜெயம்,லண்டன், சுக்ரன், தில்லாலங்கடி அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இடைப்பட்ட காலத்தில், ஏகப்பட்ட டிவி சீரியல்களில் நளினி நடித்தார். அதிலும் குறிப்பாக சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற காமெடி தொடர், நிரோஷா, எம்எஸ் பாஸ்கர் நடித்த இந்த தொடர் அமோக வரவேற்பை பெற்றது. இப்போதும் டிவி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நளினி.ஆரம்ப காலகட்டத்தில் இளம் கதாநாயகியாக நடித்து வந்த காலத்தில், அப்போது டாப் நடிகராக வலம் வந்த ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், நளினியுடன் அப்போது நடித்த இளம் நடிகர் அவரை மனதார காதலித்திருக்கிறார். ஆனால், அவர் நட்சத்திர நடிகையாக இருந்ததால், தன் காதலை வெளிப்படுத்த தயங்கி இருக்கிறார். அது வேறு யாருமல்ல, நமது ஆக்‌ஷன் கிங் நடிகர் அர்ஜூன்தான்.

எங்கள் குரல், யார் படங்களில் ;நளினியுடன் நடித்த போது அவர் மீது காதல் வயப்பட்டிருக்கிறார். ஆனால், தன் காதலை வெளிப்படுத்தும் முன்பே, ராமராஜனுடன் திருமணமாகி செட்டில் ஆகி விட்டார் நளினி.

ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் அர்ஜூன் நளினியை காதலித்த விஷயம் இப்போது வெளிவந்திருக்கிறது. ஆனால், சினிமாவை போலவே, நிஜ வாழ்விலும் நடிகர், நடிகையர் காதல் தோல்வியை சந்திக்கின்றனர் என்பது சோகமான விஷயம்தான். ஆனால், ஒரு காலகட்டத்துக்கு பிறகு, இளம் வயது காதல் அனுபவங்களை நினைத்து பார்த்தால், அது கவலையாக தெரியாது.

காமெடி போல்தான் தோன்றும். இன்று நளினியை விட மிக உயர்ந்த இடத்தில், பெரிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் அர்ஜூனும் அப்படி நினைத்து சிரிக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா?